News August 4, 2024

முதலமைச்சர் கோப்பை இணையதளம் தொடக்கம்

image

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2024ல் பங்கேற்பதற்கான இணையதள முன்பதிவை https://sdat.tn.gov.in சென்னையில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், மக்கள், அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகள் 27 வகையான விளையாட்டுகள் இதில் நடைபெற உள்ளன.

Similar News

News February 11, 2026

மருத்துவமனையை திறந்து வைத்த அமைச்சர்

image

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கிண்டியில் இன்று காலை புதிய தனியார் மருத்துவமனை திறந்து வைத்தார். பின்னர் மருத்துவமனையில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ள என்பதை குறித்து பார்வையிட்டார். மேலும் சிறப்பம்சங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கருவிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

News February 11, 2026

குடும்ப தகராறில் பெண் தீக்குளிப்பு: போலீசார் விசாரணை

image

சென்னை வியார்பாடியை சேர்ந்தவர் நந்தினி (34). இவர் குடும்பதகராறு காரணமாக நேற்று (பிப்.10) உடலில் டீசலை ஊற்றி தீக்குளித்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தகவலறிந்து வந்த வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 11, 2026

சென்னை: பைக், காருக்கு fine-ஆ? Cancel செய்வது ஈஸி!

image

சென்னை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan <<>>இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதிவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவலுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!