News August 25, 2024

முதலமைச்சர் கோப்பைக்கான போட்டி – தேதி நீட்டிப்பு

image

2024ம் ஆண்டு மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான போட்டி 5 பிரிவுகளில் மாநில அளவில் வரும் செப்., மற்றும் அக்.,மாதங்களில் நடைபெற உள்ளது.இதில் விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த 12 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்கலாம். இதில் முன்பதிவு செய்ய செப்.,2ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. http://sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 18, 2025

BREAKING விருதுநகரில் 8 போலீசார் மீது நடவடிக்கை

image

விருதுநகரில் பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீசார் பட்டாசு கடை நடத்தி வருவதாக புகார் எழுந்ததால் எஸ்பி கண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலிசார் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து சீனிவாசன், தங்கமுத்து, பழனியப்பன், முருகேசன், சக்திவேல் நெல்லைக்கும், முத்து மாரியப்பன், அயோத்தி ராமசந்திரன், உதயக்குமார் தூத்துக்குடிக்கு மாற்றம் செய்து ஐஜி பிரேமானந்த் சின்கா உத்தரவிட்டுள்ளார்.

News October 18, 2025

BREAKING அருப்புக்கோட்டையில் தீபாவளியால் விலை உயர்வு

image

விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை பூ மார்க்கெட்டி மிகவும் பிரபலமானது. இந்நிலையில் இன்று (அக்.18) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இங்கு பூக்களின் விலை அதிகரித்துள்ளது. அதில் மல்லிகை ரூ.1,800 , கனகாம்பரம் ரூ.1,000, முல்லை ரூ.1,500, பிச்சி ரூ.1,000 என விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் பன்னீர் ரோஸ் கிலோ ரூ.200, மிட்டாய் ரோஸ் கிலோ ரூ.150, மரிக்கொழுந்து ரூ.100 எனவும் விற்பனை செய்யப்படுகிறது.

News October 18, 2025

திருச்சுழி: காரில் கடத்திச் சென்ற 2 பேருக்கு குண்டாஸ்

image

குருந்தங்குளத்தில் கடந்த மாதம் தந்தை, மகனை காரில் கடத்தி ரூ.25,000 பணம் பறித்த வழக்கில் செம்பொன்நெருஞ்சியை சேர்ந்த லெட்சுமணன், வீரசூரன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் லெட்சுமணன், வீரசூரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பி கண்ணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா இருவரையும் குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்‌.

error: Content is protected !!