News March 14, 2025
முதலமைச்சர் குறித்து அவதூறு: பதிவிட்ட நபர் கைது

சேலம் கோரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் கலியுக கண்ணன் (50). இவர் அதே பகுதியில் டுடோரியல் சென்டர் நடத்திவருகிறார். இவரது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்டுள்ளார். இதுகுறித்து சைபர் கிரைம் காவல்துறையினருக்கு புகார் வந்ததை எடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Similar News
News March 14, 2025
ஆத்தூர் தனி மாவட்டமா?

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்துரை தனிமாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட ஆண்டுகால கோரிக்கையாகும். இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள பட்ஜெட் தொடரில் ஆத்தூர் தனிமாவட்டமாக அறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சேலம் மக்களே இதுகுறித்து உங்கள் கருத்தை கமெண்ட் செய்யவும். மேலும், Share பண்ணுங்க.
News March 14, 2025
தவறி விழுந்து உயிரிழப்பு: ரூ.3 லட்சம் நிவாரணம்

சேலம், மேட்டூர் வெள்ளார் கிராமம் அரசமரத்தூர் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி (55). இவர் நேற்று தண்ணீர் தொட்டியின் மீது ஏறி பணி செய்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
News March 14, 2025
சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை!

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நுரையீரல் இரத்தக் குழாய் அடைப்பினால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த சுமதி (வயது 40), வனிதா (வயது 64) ஆகியோருக்கு ஐவிசி பில்டர் எனப்படும் உயரிய சிகிச்சையை இருதயத்துறை தலைவர் பேராசிரியர் மருத்துவர்.கண்ணன் தலைமையிலான மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்து இரத்தக் குழாய் கட்டியை அகற்றி சாதனை. மருத்துவர்களை நேரில் அழைத்து மருத்துவமனை முதல்வர் வாழ்த்து!