News January 6, 2025
முதலமைச்சரைச் சந்தித்து நன்றி தெரிவித்த எம்.பி

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமாருக்கு 2024ம் ஆண்டிற்கான அம்பேத்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் தலைமை செயலகத்தில் இன்று (ஜன.6) முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் உட்பட பலர் உடனிருந்தனர்.
Similar News
News February 4, 2026
விழுப்புரம்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News February 4, 2026
”என் கனவு, என் எதிர்காலம்” இணையதளம் துவக்கம்!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது, தமிழ்நாடு முழுவதும் உள்ள இளைஞர்களின் கனவுகளை பதிவு செய்ய, ‘என் கனவு, என் எதிர்காலம்’ என்ற இணையதளத்தினை தொடங்கி வைத்தார். இதன்மூலம் இளைஞர்களின் குறைகளை நிவர்த்தி செய்யமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 4, 2026
”தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிக்கிறது” – முதலமைச்சர்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “இந்திய அரசுக்கு வருமானத்தை வாரிவழங்கும் தமிழ்நாட்டை, மத்திய அரசு வஞ்சிக்கிறது” என குற்றம் சாட்டினார். மேலும், தற்போதைய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு பெயரளவில் கூட எதுவும் அறிவிக்கப்படவில்லை எனவும் பேசியுள்ளார்.


