News August 15, 2025

முதலமைச்சருக்கு மிரட்டல் விடுத்த நபர் கைது.

image

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சுதந்திர தின விழாவில் கொடி ஏற்றும் போது வெடிகுண்டு வெடிக்கும் என நேற்று (ஆக. 14) காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் ஒருவர் தொடர்புக் கொண்டு மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் செங்கல்பட்டு மாவட்டம் படாளம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரை கைது செய்தனர். தொழிலில் நஷ்டம் அடைந்த விரக்தியில் மது போதையில் இவ்வாறு செய்தது தெரியவந்தது.

Similar News

News March 9, 2026

செங்கல்பட்டு: BE/B.tech முடித்தவர்களா நீங்கள்?

image

செங்கல்பட்டு மாவட்ட பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து மார்ச்.23க்குள் விண்ணப்பிக்கல. செம்ம வாய்ப்பு, இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்கவாது உதவும்.

News March 9, 2026

செங்கல்பட்டு மாவட்டம்- ஓர் பார்வை

image

மாநகராட்சி-1 (தாம்பரம்), நகராட்சி-4 (செங்கல்பட்டு, மறைமலைநகர், நந்திவரம்-குடுவாஞ்சேரி, மதுராந்தகம்), நகர் பஞ்சாயத்து-6, பேரூராட்சிகள்-359, தாலுகா-8, ஊராட்சி ஒன்றியம்-8, வருவாய் கிராமங்கள்-636, MP தொகுதிகள்-3, MLA தொகுதிகள்-7 (செங்கல்பட்டு, மதுராந்தகம், திருப்போரூர், சோழிங்கநல்லூர், தாம்பரம், பல்லாவரம், செய்யூர்), மொத்த பரப்பளவு-2,945 ச.கி.மீ. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!

News March 9, 2026

செங்கல்பட்டு: திமுகவில் இணைந்தனர்; பாஜக அதிர்ச்சி!

image

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியம் மறைமலைநகர் பகுதியில் நேற்று சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைச்சர் தா.மோ அன்பரசன் தலைமையில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்த பாஜக OBC அணியின் மாநிலத் துணைத் தலைவர் துரை சண்முகமணி தலைமையில் 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் திமுகவில் இணைந்தனர்.

error: Content is protected !!