News September 26, 2025

’முதலமைச்சரின் போட்டோ சூட் நடக்கிறது!’ – இபிஎஸ்

image

திண்டுக்கல்: வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று மக்களை “காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற தலைப்பில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ‘தமிழ்நாட்டில் கல்வி சீரழிந்து கிடக்கும் போது வெளி மாநில முதல்வர்களுடன் போட்டோ சூட் நடந்து கொண்டு இருக்கிறது’ எனப் பேசினார்.

Similar News

News January 2, 2026

திண்டுக்கல்: APP-ல் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு!

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News January 2, 2026

BREAKING: திண்டுக்கல் அருகே பயங்கர விபத்து!

image

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அடுத்த காமலாபுரம் பிரிவு அருகே, மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அரசு பேருந்து – லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சாலையின் நடுவே லாரி கவிழ்ந்தது. மேலும், 5 பேர் படுகாயம் அடைந்த நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி சம்பவம் குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 2, 2026

திண்டுக்கல்: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு

image

திண்டுக்கல், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!