News December 8, 2024

முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு

image

10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு வரும் ஜனவரி மாதம் 25ஆம் தேதி நடைபெறும் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் 1000 பேர் தேர்வு செய்யப்பட்டு, அதில் 500 மாணவர் மற்றும் 500 மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கப்படும். http://dge.tn.gov.in எனும் இணையதளத்தில் நவ., 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

Similar News

News March 3, 2026

கரூரில் பரிசு வழங்கிய செந்தில் பாலாஜி!

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, கரூர் வடக்கு மாநகரப் பகுதியில் எம்எல்ஏ செந்தில் பாலாஜி 73 கிலோ மெகா கேக் வெட்டிக் கொண்டாடினார். தொடர்ந்து, வார்டுகளுக்கிடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அவர் பரிசுகளை வழங்கிக் கௌரவித்தார். இந்நிகழ்வில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்

News March 3, 2026

கரூரில் தீயில் கருகிய நிலையில் பெண் சடலம் மீட்பு!

image

வேலாயுதம்பாளையம் செம்பாடாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜாஸ்லி அன்பரசி (47), வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் தீக்காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடலைக் கைப்பற்றி கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கணவர் இறந்த துக்கத்தில் தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை.

News March 3, 2026

கரூரில் 175 பேர் ஆப்சென்ட் – கலெக்டர் ஆய்வு!

image

கரூர் மாவட்டத்தில் 47 மையங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது. புனித தெரசா பள்ளியில் கலெக்டர் ரவிகுமார் ஆய்வு செய்தார். மொத்தம் 10,351 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 10,174 பேர் தேர்வு எழுதினர். 99 மாணவர்கள், 59 மாணவியர் மற்றும் 17 தனித்தேர்வர்கள் என மொத்தம் 175 பேர் தேர்வெழுத வரவில்லை. தேர்வுப் பணியில் 630 ஆசிரியர்கள், 110 பறக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர். .

error: Content is protected !!