News September 23, 2025

முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற வழக்கறிஞர்

image

மயிலாடுதுறை மாவட்ட அரசு வழக்கறிஞர் டாக்டர் இராம.சேயோன் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, புத்தகம் பரிசாக வழங்கி வாழ்த்து பெற்றார். முதல்வர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். நிகழ்வில் திமுக மூத்த நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Similar News

News September 23, 2025

அரசு மருத்துவமனையில் 2 செவிலியர்கள் பணியிட மாற்றம்

image

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனையில் கடந்த 17ஆம் தேதி 27 கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு, ஊசி போட்ட சிறிது நேரத்தில் காய்ச்சல் மற்றும் உடல் நடுக்கம் ஏற்பட்டது. பின்னர் மருத்துவர்கள் மாற்று சிகிச்சை அளித்ததும் உடல் சீராகினர். இந்த விவகாரத்தில் அன்று பணியிலிருந்து இரண்டு செவிலியர்களை பணியிட மாற்றம் செய்து சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

News September 23, 2025

கிராம உதவியாளர் பணிக்கான நேர்காணல் ஒத்திவைப்பு

image

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோட்டம் தரங்கம்பாடி வட்ட அலுவலகத்தில் எதிர்வரும் (24.9.2025) அன்று நடைபெறுவதாக இருந்த கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல், தேர்வு நிர்வாக காரணங்களுக்காக தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. நேர்காணல் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தரங்கம்பாடி வருவாய் வட்டாட்சியர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 23, 2025

மயிலாடுதுறை: இந்தியன் வங்கியில் சூப்பர் வாய்ப்பு!

image

மயிலாடுதுறை மக்களே, மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்த 23 முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள், <>இங்கு <<>>கிளிக் செய்து 13.10.2025-ம் தேதிக்குள்ளாக விண்ணப்பிக்கலாம். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!