News November 5, 2025
முட்டி வலி நீங்க தினமும் காலை இதனை பண்ணுங்க!

Stair hops உடல் எடையை குறைத்து, கால்களுக்கு வலு சேர்க்கும் ✱செய்முறை: படிக்கட்டுகளில் கால்களை இடுப்பளவு விரித்து நிற்கவும். கால்களை முட்டிவரை மடக்கி, மேலே இருக்கும் படிக்கு குதித்து முன்னேறவும்.(உயரத்துக்கு ஏற்றவாறு, ஒன்று அல்லது இரண்டு படிகளை சேர்த்தவாறு குதிக்கலாம்). குதிக்கும் போது கைகளை முன்னே நீட்டி, உடல் வெயிட்டை பேலன்ஸ் செய்யுங்கள். 8- 10 படிகள் என 2 செட்களாக செய்து வரலாம்.
Similar News
News November 5, 2025
சிறுபான்மை நலத்துறை அமைச்சரான Ex.கிரிக்கெட்டர்

தெலங்கானா அமைச்சராக பதவியேற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனுக்கு சிறுபான்மை நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. MLA தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த அசாருதீனை கடந்த ஆகஸ்ட் மாதமே சட்ட மேலவை உறுப்பினராக பரிந்துரை செய்த நியமனத்திற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் தரவில்லை. 1984 முதல் 2000-ம் ஆண்டு வரை கிரிக்கெட்டில் அசத்திய இவர், 2009- 2014 வரை MP ஆக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 5, 2025
எதிர்பார்த்த வசூலை குவிக்காத பாகுபலி: தி எபிக்?

பத்து ஆண்டுகள் கழித்து அக்.31-ம் தேதி ரீ-ரிலீசானது பாகுபலி: தி எபிக் திரைப்படம். இப்படம் வெளியான 5 நாட்களில் இந்தியாவில் ₹27.3 கோடி வசூல் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரீ-ரிலீஸ் படத்துக்கு இது ஒரு நல்ல வசூல்தான். ஆனால் இப்படத்திற்கு இருந்த ஹைப்பால் வசூல் அதிபயங்கரமாக இருக்கும் என கணிக்கப்பட்டது. இதனால் படக்குழு சிறிது ஏமாற்றமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
News November 5, 2025
கூட்டணி.. சற்றுநேரத்தில் விஜய் முக்கிய அறிவிப்பு

விஜய் தலைமையில் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்னும் சற்றுநேரத்தில் தொடங்கவிருக்கிறது. இதில் ‘கூட்டணி’ தொடர்பாக முக்கியமான தீர்மானத்தை நிறைவேற்றி, விஜய் புதிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகளுடன் விரிவாக ஆலோசனை செய்யும் விஜய், கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வு, தேர்தல் பரப்புரை உள்ளிட்டவை குறித்து முக்கிய முடிவு எடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


