News November 16, 2024
முடி வெட்டுவதற்காக வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை

மூலக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் சலூன் கடைக்கு நேற்று(நவ.15) 4 வயது சிறுமிக்கு முடி வெட்டுவதற்காக அவருடைய தந்தை அழைத்து வந்தார். சிறுமியை முடிவெட்டுமாறு கூறிவிட்டு தந்தை வெளியே சென்று உள்ளார். இதை வாய்ப்பாக பயன்படுத்திய கணேசன் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து கணேசனை தேடி வருகின்றனர்.
Similar News
News March 1, 2026
நயினார் நாகேந்திரன் தலைமையில் பிரதமரை வரவேற்க கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி இன்று கூட்டணி மாநாட்டில் கலந்து கொள்கிறார். தமிழகம் வர உள்ளதால் நெல்லை எம்எல்ஏ நைனார் நாகேந்திரன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறார். மாநாட்டு திடலில் நடைபெற்று வரும் இறுதிகட்ட பணிகளை மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் மற்றும் 2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பொறுப்பாளர் பியூஷ் கோயல், மத்திய இணை அமைச்சர் முருகன், அதிமுக நிர்வாகிகள் ஆகியோர் கவனித்து வருகின்றனர்.
News March 1, 2026
திருநெல்வேலி: பெண் உட்பட 4 பேர் குண்டாஸில் கைது

நெல்லை மாவட்டம், தாழையூத்து திருக்குறுங்குடி, மானூர் மற்றும் வீரவநல்லூர் பகுதியில் கஞ்சா விற்ற வழக்கில் பேராட்சி செல்வி, சண்முகசுந்தரம், மாரிமுத்து, கோயில்ராஜை போலீசார் கைது செய்தனர். நெல்லை எஸ்பி பிரசன்ன குமார் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சுகுமார் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். பேராட்சி செல்வி மதுரை பெண்கள் தனி சிறையில் அடைக்கப்பட்டார்.
News March 1, 2026
திருநெல்வேலி: குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

பழைய பேட்டை கிருஷ்ணாபேரியை சேர்ந்தவர் பெரியராஜா (29). இவர் கொலை முயற்சி உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இது குறித்து மாநகர போலீஸ் துணை கமிஷனர் விஜயகுமார் பரிந்துரையின்படி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவையடுத்து பெரிய ராஜா நேற்று (பிப்.28) குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


