News November 13, 2025

முடி வளர்ச்சிக்கு அற்புதமான எண்ணெய் இதுதான்

image

கடுகு எண்ணெயில் உள்ள வைட்டமின் இ, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் முடி வளர்ச்சிக்கு உதவும் என்கின்றனர். அத்துடன், மாசு, UV Rays-ஆல் ஏற்படும் சேதங்களிலிருந்து முடியை இது காக்கிறது. இதனால் காஸ்ட்லியான சீரம்களை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்த எண்ணெய்யில் பூஞ்சை எதிர்ப்பு சக்தியும் இருப்பதால் பொடுகு தொல்லையும் பறந்து போகும். வாரத்திற்கு 2 முறை இந்த எண்ணெய்யை தேய்த்து, தலைக்கு குளியுங்கள். SHARE.

Similar News

News November 13, 2025

டெல்லி குண்டுவெடிப்பில் மேலும் ஒரு டாக்டர் கைது

image

<<18274461>>டெல்லி குண்டுவெடிப்பு <<>>சம்பவத்தில் லக்னோவை சேர்ந்த டாக்டர் பர்வேஸ் அன்ஸாரியை பயங்கரவாத எதிர்ப்பு படை கைது செய்துள்ளது. இவர் ஏற்கனெவே கைது செய்யப்பட்ட டாக்டர் ஷாஹீன் ஷகித்தின் தம்பி என்று தெரியவந்துள்ளது. குண்டுவெடிப்புக்கு தேவையான தொலைத்தொடர்பு வசதிகளை பர்வேஸ் அன்ஸாரி ஏற்படுத்தி கொடுத்ததாக கூறப்படுகிறது. அவரிடம் இருந்து எலக்ட்ரானிக் சாதனங்கள், லேப்டாப்-கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

News November 13, 2025

குளிர்கால சரும பொலிவுக்கு நைட்ல இத பண்ணுங்க!

image

குளிர்காலத்தில் சரும பாதிப்பு அதிகமாக இருக்கும். Moisturizer தடவியும் பலன் இல்லை என நினைப்பவர்கள் வீட்டிலேயே இந்த கிரீமை செய்து தடவுங்கள். *2 வைட்டமின் E கேப்ஸ்யூல்கள், 4 துளி ஆலிவ் ஆயில், 2 துளி பாதாம் ஆயில், 4 துளி ரோஸ்மேரி எண்ணெய், ஒரு ஸ்பூன் பப்பாளி ஜெல் ஆகியவற்றை நன்றாக கலக்கி கண்ணாடி பாட்டிலில் சேமிக்கவும். தினமும் இரவு தூங்கும் முன் இதை தடவினால் முகம் பொலிவாக மாறும்.

News November 13, 2025

வங்கி கணக்கில் இந்த மாதம் ₹4,000.. வந்தாச்சு அப்டேட்

image

PM KISAN திட்டத்தின் 21-வது தவணைத் தொகை(₹2,000) எப்போது கிடைக்கும் என விவசாயிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இம்மாத இறுதியில் தொகையை வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய திட்டமிட்டுள்ள மத்திய அரசு, KYC பிரச்னையால் கடந்த முறை விடுபட்டவர்களுக்கு 2 தவணைகளையும் (₹4,000) சேர்த்து வழங்க முடிவு செய்துள்ளது. இதுவரை KYC அப்டேட் செய்யாதவர்கள் <>pmkisan.gov.in<<>> இணையதளத்தில் உடனே விண்ணப்பிக்கவும். SHARE IT

error: Content is protected !!