News January 6, 2026
முடி உதிர்வை தடுக்க இதை செய்யுங்கள் போதும்!

மனஅழுத்தம், சத்து குறைபாடு என முடி உதிர்வுக்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால், முடி உதிர்வை தடுக்கவும், முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் சில யோகாசனங்கள் உதவும் என்று பாரம்பரிய மருத்துவர்கள் ஆலோசனை தருகின்றனர். குறிப்பாக <<10935677>>வஜ்ராசனம்<<>>, சர்வாங்காசனம், சிரசாசனம், விபரீதகரணி ஆகிய ஆசனங்கள் மிகவும் உதவும். இவற்றை செய்ய தினமும் 15 நிமிடம் செலவழித்தாலே போதும், முடி உதிர்வை தடுக்கலாம்.
Similar News
News February 17, 2026
உலகின் பணக்கார கிராமம் இந்தியாவில் உள்ளது தெரியுமா?

குஜராத்தில் உள்ள மதாபார் என்ற கிராமம் உலகின் பணக்கார கிராமங்களில் ஒன்றாக உள்ளது. இந்த கிராமத்தில் 17-க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகளும், சுமார் ₹7,000 கோடி வங்கி வைப்புத்தொகையும் உள்ளன. இங்குள்ள குடும்பங்களில் 65% பேர் வெளிநாடுகளில் வசித்து வருவதால், அவர்கள் தங்கள் வருமானத்தை சொந்த ஊரான மதாபார் வங்கிகளில் சேமிக்கின்றனர். இதனால் இந்த ஊரில் பணம் குவிந்துள்ளது.
News February 17, 2026
தற்பெருமை பட்ஜெட்டுக்கு ஜீரோ மார்க்: தவெக

இடைக்கால பட்ஜெட்டில், திமுக அரசின் தற்பெருமைகளே அதிகமாக இருந்தன என தவெக அருண்ராஜ் விமர்சித்துள்ளார். பொருளாதாரத்தில் TN முதலிடத்தில் இருக்கும்போது இத்தனை லட்சம் கோடி எதற்காக கடன் வாங்க வேண்டுமென கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கடனால், எதிர்காலத்தில் மிகப்பெரிய பொருளாதார பிரச்னைகளை TN சந்திக்கும் என கூறியுள்ளார். மேலும் இந்த பட்ஜெட்டுக்கு 0 மார்க் மட்டுமே எனவும் தெரிவித்துள்ளார்.
News February 17, 2026
பொதுத்தேர்வெழுதும் +2 மாணவர்களுக்கு..

+2 பொதுத்தேர்வு மார்ச் 2 (திங்கள்) முதல் நடைபெறவுள்ளது. இதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, கணக்குப் பதிவியல் பாடத் தேர்வுக்கு சாதாரண கால்குலேட்டர் அனுமதிக்கப்படும். இயற்பியல், வேதியியல், கணிதம், புள்ளியியல், வணிகக் கணிதம் பாடத் தேர்வின்போது லாகரிதம் புக் வழங்கப்படும். தேர்வின்போது மீதமுள்ள வினாத்தாள்கள், தேர்வெழுதும் மாணவர்கள் முன்னிலையிலேயே உறையிட்டு சீலிடப்படும்.


