News June 19, 2024
முடிவுக்கு வரும் மாஞ்சோலை சகாப்தம்!

நெல்லை, அம்பை அருகே 3500 அடி உயரத்தில் அமைந்துள்ளது மாஞ்சோலை எஸ்டேட். சிங்கம்பட்டி ஜமீனுக்கு சொந்தமான இவ்விடம் 1948-ல் கொண்டு வரப்பட்ட சட்டத்தின்படி அரசிடம் சென்றது. அன்றைய காலத்தில் இந்த இடம் குத்தகைக்கு விடப்பட்டிருந்ததால் 2028 ஆம் ஆண்டு வரை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. தற்போது குத்தகை முடிவதால் மாஞ்சோலை மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. மாஞ்சோலை குறித்த உங்கள் அனுபவம் என்ன?
Similar News
News September 14, 2025
நெல்லை: மழைக்காலத்தில் ஒரு மெசேஜ் போதும்!

திருநெல்வேலி மக்களே உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், திருநெல்வேலி மாவட்ட மக்கள் 8903331912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். மறக்காம SHARE பண்ணுங்க!
News September 14, 2025
நெல்லையில் புதிதாக உருவாகும் கோட்டம்?

காங்கிரஸ் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்எல்ஏ, தமிழ்நாடு வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை விருதுநகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். தென்காசி பிரிப்புக்குப் பின், நெல்லை மாவட்டத்தில் நெல்லை, சேரன்மகாதேவி கோட்டங்கள் உள்ளன. சேரன்மகாதேவி கோட்டத்தை இரண்டாக பிரித்து, நாங்குநேரியைத் தலைமையிடமாக கொண்டு புதிய கோட்டம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார் .
News September 14, 2025
நெல்லையில் திருக்குறள் பயிற்சி கலந்து கொள்ள அழைப்பு

திருநெல்வேலி திருவள்ளுவர் பேரவை இலக்கிய அமைப்பு சார்பில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கட்டணமில்லா திருக்குறள் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், தமிழக அரசு திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவ மாணவிகளுக்கு நடத்தப்படும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ளவும் வழி காட்டப்படுகிறது என்று பேரவை அமைப்பாளர் ஜெயபாலன் தெரிவித்தார். விபரங்களுக்கு 9842080208 அழைக்கலாம்.