News October 23, 2025
முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி கரையோரங்களில் தொடர் மழை காரணமாகவும், மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் முக்கொம்பு மேலணைக்கு இன்று காலை 7 மணி நிலவரப்படி 54,200 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அதே நேரம் முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில் 12,800 கன அடியும், கொள்ளிடத்தில் 41,000 கன அடியும், கிளை வாய்க்காலில் 400 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
Similar News
News October 23, 2025
திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கான அறிவிப்பு

தமிழகத்தில் நெல் சாகுபடியில் அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிகளுக்கு நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் முதலிடம் பெரும் விவசாயிக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும். இதில் பங்கேற்க விரும்பும் திருச்சி மாவட்ட விவசாயிகள், அருகில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குநரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட வேளாண் இணை இயக்குநர் வசந்தா தெரிவித்துள்ளார்.
News October 23, 2025
திருச்சி: ரயில் சேவையில் மாற்றம்

திருச்சி, மணப்பாறைம் வையம்பட்டி வழியாக இயக்கப்படும் செங்கோட்டை விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கோட்டை – மயிலாடுதுறை விரைவு ரயில் வரும் 24, 25, 26, 27, 28, 30, 31 ஆகிய தேதிகளில் வழக்கமான வழித்தடமான வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களை தவிர்த்து காரைக்குடி, திருச்சி சந்திப்பு வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 23, 2025
திருச்சி: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

திருச்சி மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ <