News December 25, 2025
முக்கிய மாவோயிஸ்ட் தளபதி என்கவுண்டர்

தலைக்கு ₹1.1 கோடி விலை நிர்ணயிக்கப்பட்ட மாவோயிஸ்ட் முக்கிய தளபதி கணேஷ் உய்க்கை (69) பாதுகாப்பு படையினர் என்கவுண்டர் செய்தனர். ஒடிசாவில் உள்ள ரம்பா வனப்பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், 2 பெண்கள் உள்பட மொத்தம் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். CRPF, BSF என மொத்தம் 23 குழுக்கள் இந்த வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், கொல்லப்பட்டவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
Similar News
News December 29, 2025
ஜனநாயகன் படம் இதைதான் பேசுது: பிரஜின்

குட் டச், பேட் டச் பற்றி தான் விஜய்யின் ஜனநாயகன் படம் பேசுவதாக நடிகர் பிரஜின் தெரிவித்துள்ளார். ஜனநாயகன் திரைப்படம் பாலையாவின் பகவந்த் கேசரியின் ரீமேக் தான் என உறுதியாக கூறினார். மேலும் பள்ளிகளில் செக்ஸ் கல்வி அவசியம் என்றும், அங்கு எந்தளவுக்கு சொல்லிக் கொடுக்கிறார்களோ அந்தளவுக்கு தவறுகள் குறையும் எனவும் பேசிய அவர், பெற்றோர்களும் அதனை சொல்லி கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
News December 29, 2025
வங்கி கணக்கில் ₹6,000.. வந்தாச்சு அரசு அப்டேட்

PM KISAN திட்டத்தின் கீழ், நலிவடைந்த விவசாயிகளுக்கு 3 தவணைகளாக ஆண்டுக்கு ₹6,000 வழங்கப்பட்டு வருகிறது. இதனை ₹12,000 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், PM KISAN திட்ட நிதி உயர்வு குறித்து தற்போது எந்த பரிசீலனையும் இல்லை என மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் 22-வது தவணை (₹2,000) பிப்ரவரியில் வரவு வைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
News December 29, 2025
அன்புமணி மார்பில் குத்திவிட்டார்: ராமதாஸ்

அன்புமணி சில ஆண்டுகள் பொறுக்க மாட்டாரா என்று பலர் தன்னிடம் கேட்பதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். தூக்க மாத்திரை போட்டால் கூட தூக்கம் வருவதில்லை, அன்புமணி செய்தது ஞாபகம் வந்துவிடுகிறது என்று நா தழுதழுக்க வேதனையுடன் கூறியுள்ளார். தன்னை அன்புமணி மார்பிலும் முதுகிலும் ஈட்டியால் குத்திவிட்டதாக கூறிய ராமதாஸ், ஏன் என்னை கேவலப்படுத்துகிறாய் என்றும் சேலத்தில் நடந்த பாமக பொதுக்குழுவில் பேசியுள்ளார்.


