News August 18, 2024

முக்கிய தலைவர்கள் நேரில் அஞ்சலி

image

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு மாவட்ட செயலாளர்கள் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் ஆகியோர் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

Similar News

News January 5, 2026

செங்கை: இன்றே பண்ணலனா கை நழுவும்!

image

1. BOI வங்கியில் 514 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.05. சூப்பர் வாய்ப்பு.. மிஸ் பண்ண வேண்டாம். டிகிரி முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News January 5, 2026

செங்கை: படுஜோர் விற்பனை; தட்டி தூக்கிய போலீஸ்

image

பொழிச்சலூர் மற்றும் பல்லாவரம் பகுதிகளில் கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனை செய்த 6பேரை சங்கர் நகர் போலீசார் கைது செய்தனர்.தடாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் பல்லாவரம், திரிசூலம், பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்றது உறுதியானது. கைதான கிஷோர், அசோக்குமார் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News January 5, 2026

செங்கை: அரசு பேருந்து சக்கரம் ஏறி பலி!

image

செங்கல்பட்டு அருகே நடந்த இரு வேறு சாலை விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர். திருக்கழுக்குன்றம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற கூலித்தொழிலாளி பழனி (58), அரசு பேருந்து மீது மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு விபத்தில், ஒரகடம் சாலையில் சென்ற இளைஞர் உதயா (21), தெள்ளிமேடு அருகே சாலைத் தடுப்பில் மோதி உயிரிழந்தார். இச்சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!