News June 4, 2024

முகவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம்

image

தென்காசி மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தனியார் கல்லூரியில் தீவிரமாக எண்ணப்பட்டு வருகிறது. இன்று காலை தபால் வாக்கு எண்ணிக்கையின் போது வாக்குச்சாவடி முகவர்களிடம் காட்டாமல் அதிகாரிகள் வாக்குகளை பெட்டியில் போட்டதால் முகவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

Similar News

News February 7, 2026

தென்காசி: பெண்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன்

image

லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதற்கு மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் 18 -50 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார், பான் கார்டு, வருமான சான்று, சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழுடன் அருகிலுள்ள சுய உதவிக்குழு அலுவலங்கள் (அ)<> -1 <<>>என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News February 7, 2026

தென்காசி: டிகிரி போதும்.. ரூ.48,480 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி

image

தென்காசி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 2050 Circle Based Officers (CBO) பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 21 – 30 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் பிப் 18க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.48,480 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை வேலை நாடும் நபர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

News February 7, 2026

தென்காசி: வீடு புகுந்து நகை, பணம் திருட்டு; மர்ம நபருக்கு வலைவீச்சு

image

பாம்புகோவில் சந்தை பகுதியை சேர்ந்த தம்பதி மாரியப்பன் – பார்வதி. இருவரும் நேற்று உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிற்கு சென்ற நிலையில் பார்வதியின் தாயார் மாரியம்மாள் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது பர்தா அணிந்து வந்த மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்து அவரை தாக்கி பீரோவில் இருந்த 26 பவுன் நகை, ரூ.7 லட்சம் பணத்தை திருடி சென்றார். இதுகுறித்து CCTV அடிப்படையில் போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!