News January 5, 2026

முகமது ஷமிக்கு ECI சம்மன்

image

மேற்கு வங்கத்தில் SIR நடைமுறையின் ஒரு பகுதியாக, முகமது ஷமி மற்றும் அவரது சகோதரர் முகமது கைஃப் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவர்களது கணக்கெடுப்பு படிவங்களில் உள்ள சிக்கல்கள் காரணமாக, வரும் 9 மற்றும் 11-ம் தேதிகளில் உதவி தேர்தல் பதிவு அதிகாரி முன் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. உ.பி.,யில் பிறந்த ஷமி, பல ஆண்டுகளாக கொல்கத்தாவில் நிரந்தரமாக வசித்து வருவதுடன், அங்கு வாக்காளராகவும் உள்ளார்.

Similar News

News February 7, 2026

இந்தியா – USA டீலிங்… சீக்ரெட்டாக பயனடையும் சீனா

image

இந்தியா – USA இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தால் சீனா மறைமுகமாக பயனடைகிறது என நிபுணர்கள் சொல்கின்றனர். அதாவது USA-ஆல் ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா குறைத்துள்ளது. இதனால், தனது பொருளாதாரத்தை நிலையாக வைத்திருக்க, சீனாவுக்கு ஒரு பீப்பாய்க்கு 12 டாலர் வரை ரஷ்யா தள்ளுபடி வழங்கியுள்ளது. இதனால், ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதியில் 47% அளவுக்கு வாங்கிவரும் சீனா, மேலும் கூடுதலாக வாங்கும் என கூறப்படுகிறது.

News February 7, 2026

விக்னேஷ் சிவனுக்கும் இவருக்கும் என்ன பஞ்சாயத்து?

image

விக்னேஷ் சிவனுக்கும் தயாரிப்பாளர் லலித்குமாருக்கும் சுமார் 6 மாதங்களாக பஞ்சாயத்து நடப்பதாக பேசப்படுகிறது. இதனால் தான் LIK படத்தின் ரிலீஸும் இழுத்துக் கொண்டிருக்கிறதாம். பிரச்னைக்கு இன்னும் ஒரு எண்ட் கார்டு வராததால் காதலர் தின ரிலீஸுக்கு காத்திருந்த LIK மீண்டும் ஒத்திவைக்கப்படலாம் என்கின்றனர். அத்துடன் தனது மகன் (சிறை பட ஹீரோ) நடிக்கும் படங்களில் லலித் கவனம் செலுத்துவதாகவும் கூறப்படுகிறது.

News February 7, 2026

அப்படி ஒரு தொகுதியே இல்லங்க.. பனையூர் பரிதாபம்

image

‘பனையூர் தொகுதில விஜய் நிக்கனும்’ என்று தவெகவில் பலரும் விருப்ப மனு அளித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால், தவெக தலைமை அலுவலகம் இருக்கும் பனையூர் ஒரு தொகுதி அல்ல, அது சோழிங்கநல்லூர் தொகுதிக்குள் வருகிறது என்பதே உண்மை. இதனால், விஜய் எப்போதும் பனையூரிலேயே இருப்பதால், தொண்டர்களும் அதை தொகுதியாகவே நினைத்துவிட்டார்கள் போல என பிற கட்சியினர் கூறுகின்றனர். இப்போ என்ன சொல்றது?

error: Content is protected !!