News March 4, 2026
முகத்தில் ஆங்காங்கே கருப்பா இருக்கா? DO THIS

நம்மில் பலருக்கு முகத்தில் பிக்மெண்டேஷன் பிரச்னை இருக்கிறது. இதனால் முகத்தை வெளியில் காட்டவே சிலர் தயங்குகின்றனர். கவலை வேண்டாம். இதனை சரிசெய்ய ABC ஜூஸ் உதவும் என டாக்டர்கள் சொல்கின்றனர். இதற்கு பாதி ஆப்பிள், ஒரு கேரட், பாதி பீட்ரூட் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்று அரைத்து வடிகட்டி குடியுங்கள். இதை தினமும் ஒரு கிளாஸ் குடித்தால் பிக்மெண்டேஷன் பிரச்னை சரியாகும். SHARE.
Similar News
News April 5, 2026
BIG NEWS: வீட்டு சமையல் GAS விலை உயர்ந்தது

Torrent Gas நிறுவனம் குழாய்கள் மூலம் வீடுகளுக்கு சப்ளை செய்யப்படும் CNG விலையை கிலோவுக்கு ₹2.50 உயர்த்தியுள்ளது. இது நடப்பு மாதம் முதல் அமலுக்கு வருகிறது. சென்னையில் ஒரு கிலோ விலை தற்போது ₹91.50 என்ற அளவில் உள்ளது. ஈரான் – இஸ்ரேல் போரால் கடந்த 1-ம் தேதி வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ₹203 உயர்ந்தது. எரிபொருள் பிரச்னை இல்லை என அரசு கூறி வரும் அதேவேளையில் விலை உயர்வும் தொடர்கிறது.
News April 5, 2026
வேட்பாளரை மாற்றிய ராமதாஸ்

காட்டுமன்னார்கோவிலில் தான் போட்டியிடவில்லை என திருமா அறிவித்த 24 மணி நேரத்திற்குள், அத்தொகுதியின் வேட்பாளரை மாற்றியிருக்கிறார் ராமதாஸ் (பாமக). வந்தவாசி தொகுதி வேட்பாளராக களமிறங்கிய முரளி சங்கர், தற்போது காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவார் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார். இந்த வேட்பாளர் மாற்றம் திருமாவை போன்று ராமதாஸின் தேர்தல் வியூகம் என கூறப்படுகிறது. <<-se>>#TNElection2026<<>>
News April 5, 2026
அந்த நாள்.. ஏங்குகிறீர்களா? அனுபவிக்கிறீர்களா?

ஞாயிறு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. ஆவி பறக்கும் இட்லியில் சட்னியை பிசைந்து சாப்பிட்டுவிட்டு, அது ஜீரணிக்க வெயிலில் ஒரு கிரிக்கெட். வீட்டிற்கு வந்ததும் கறி விருந்தில் ஒரு பிடி. அசந்து தூங்கி எழுந்தால் மணி 5 ஆகியிருக்கும். பின்னர், ஊரின் நடுவே அமர்ந்து நண்பர்களுடன் கதை பேசிவிட்டு, இரவுக் காட்சியில் நல்ல படத்தை டிவியில் பார்த்திருப்போம். இந்த வாழ்க்கை முறை இப்போதும் உங்களுக்கு இருக்கிறதா?


