News August 28, 2024
மீன் வளர்ப்போர் கவனத்திற்கு

மீன் வளர்ப்போர், கண்மாய்களில் மீன் பாசி
குத்தகை எடுப்போர் மற்றும் மாவட்ட மீன் வளர்ப்போர் அனைவரும் உறுப்பினராக தங்களது பண்ணை குட்டைகளை பதிவு செய்திடல் வேண்டும் அல்லது முகவரியிலோ, நேரிலோ அல்லது 04575 – 240848 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 9384824553 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 9, 2025
காவல் வாகனங்கள் ஏலம் – சிவகங்கை எஸ்.பி

சிவகங்கை மாவட்ட காவல்துறையில் முதிர்ந்த மற்றும் உதிரா நிலையில் உள்ள காவல் வாகனங்களை பொது ஏலத்தில் ஏலம் விடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் (24/08/2025) மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் (21/08/2025) அன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை ₹1000/- முன் தொகையினை செலுத்தி ஏலம் எடுக்க தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என சிவகங்கை எஸ்.பி தெரிவித்துள்ளார்.
News August 9, 2025
சிவகங்கை: அரசு வேலை.. ரூ.68,000 வரை சம்பளம்!

சிவகங்கை இளைஞர்களே, தமிழக சுற்றுசூழல் துறையில் புராஜக்ட் அசோசியேட், கணக்கு அதிகாரி, உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி, தட்டச்சு என பணிக்கேற்ற தகுதியுடையோர்<
News August 9, 2025
சிவகங்கை: அஜித்குமார் வழக்கு CBI திடுக் தகவல்..!

மடப்புரம் அஜித் உயிரிழந்த வழக்கில், கார் சாவியை நீண்ட நேரம் கழித்து தன்னிடம் கொடுத்ததாக நிகிதா கூறியிருந்தார். மேலும் காரை வடகரை வரை அஜித்தும், அவர் நண்பரும் ஓட்டி வந்ததாக கூறப்பட்டது. இதில், சிபிஐ அதிகாரிகள் வடகரையில் விசாரணையை தொடங்கினர். CCTV காட்சிகளை ஆய்வு செய்ததில், நிகிதா தான் காரை ஓட்டி வந்ததும், பார்க்கிங்கை விட்டு கார் வெளியே செல்லவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.