News July 24, 2024
மீன் மார்க்கெட்டை காலி செய்யக்கோரி எம்எல்ஏ கடிதம்

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அமைச்சர் நேருவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 2018ல் உக்கடம் மேம்பாலம் அமைக்க சிஎம்சி காலனி மக்களின் இடம் பெறப்பட்டது. மாற்றாக அப்பகுதி மீன் மார்க்கெட்டை அப்புறப்படுத்தி 18 மாதங்களில் 520 வீடுகள் கட்டி தரப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. 4 ஆண்டுகள் ஆகியும் மீன் மார்க்கெட்டை அப்புறப்படுத்தாததால் மக்கள் வீடின்றி அவதிப்படுகின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News March 7, 2026
BREAKING: வெள்ளியங்கிரியில் பக்தர் உயிரிழப்பு

கோவைப்பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு கடந்த பிப்.1 முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். வெள்ளிங்கிரி 1-வது மலை செல்லும் வழியில் முதியவர் ஒருவர் சுய நினைவின்றி கிடப்பதாக வந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற வனத்துறையினர் டோலிக்கட்டி அவரை தூக்கி வந்தனர். மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர் இறந்தது தெரிந்தது. விசாரணையில் அவர் பல்லடம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பது தெரியவந்துள்ளது.
News March 6, 2026
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (06.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 6, 2026
கோவை: உயிர் காக்கும் முக்கிய வாட்ஸ்அப் எண்!

கோவை மக்களே விபத்து காலங்களில் அவசர சிகிச்சைக்காக ‘108’ ஆம்புலன்ஸை அழைப்பதில் ஏற்படும் முகவரி சிக்கல்களைத் தவிர்க்க, தமிழக சுகாதாரத் துறை 94450 30725 என்ற புதிய வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் விபத்து நிகழ்ந்த இடத்தின் (Location) தகவலைத் துல்லியமாகப் பகிர்ந்து, ஆம்புலன்ஸ் சேவையை விரைவாகப் பெற முடியும். மனித உயிர்களைக் காக்கும் இந்த மிக முக்கியமான தகவலை SHARE பண்ணுங்க!


