News May 12, 2024
மீன்பிடி தடை காலம் மீன்களின் வரத்து குறைவு

தமிழிகத்தில் மீன்பிடி தடை காலம் அமலில் இருப்பதால் வேலூர் மீன் மார்க்கெட்டிற்கு இன்று (மே 12) மீன்களின் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் கடந்த வாரத்தை விட மீன்களின் விலையும் உயர்ந்தது. பெரிய வஞ்சரம் மீன் ரூ 1600, சிறிய வஞ்சரம் மீன் ரூ 800, இறால் ரூ 450 முதல் 600, கட்லா ரூ 160, நண்டு ரூ 400 முதல் 450, மத்தி ரூ 140 முதல் 160 என மீன்கள் விற்பனை செய்யப்பட்டது.
Similar News
News July 8, 2025
இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

வேலூர் மாவட்ட காவல்துறையால் (8 ஜூலை) இன்று இரவு பாதுகாப்பு பணிக்காக ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மற்றும் கடலூர் சாலைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைகளுக்கு கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News July 8, 2025
வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வழிகாட்டுதலின்படி, ACTU & IUCAW போலீசார், நேற்று (ஜூலை 07) தேதி வேலூர் விருபாட்சிபுரம் தேசியா மேல் நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகள் மற்றும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, பெண்கள் தொடர்பான உதவி எண் 181, குழந்தைகள் உதவி எண் 1098, குழந்தை திருமணம் மற்றும் போக்சோ குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
News July 8, 2025
வாடகை வீட்டில் வசிப்போர் கவனத்திற்கு 2/2

தமிழ்நாடு வீட்டு வாடகை முறைப்படுத்துதல் புதிய சட்டம் 2017: *குடியிருப்பவர் வீட்டிற்குள் வீட்டு உரிமையாளர் காலை 7 மணிக்கு முன்பு, இரவு 8 மணிக்கு பின்னர் செல்ல கூடாது. *3 மாத வாடகையை மட்டுமே முன்பணமாக பெற வேண்டும். *ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வாடகையை மட்டுமே பெற வேண்டும். *ஒப்பந்தம் முடியாமல் வீட்டை காலி செய்ய சொல்ல கூடாது. *கட்டாயம் ரசிது தர வேண்டும். *ஒப்பந்ததை பதிவு செய்ய வேண்டும். ஷேர் பண்ணுங்க