News April 9, 2024

மீன்பிடி தடைக்காலம் வரும் ஏப்.15ல் தொடக்கம்

image

புதுச்சேரி மீன்வளத்துறை சார்பு செயலர் புனிதமேரி வெளியிட்ட உத்தரவில், இந்திய அரசின் மீன்வள அமைச்சகத்தின் துணை ஆணையர் உத்தரவுப்படி மீன்வளத்தை பாதுகாத்திட கடந்த ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தியது போல், வரும் ஏப்ரல். 15 ஆம் தேதி முதல் ஜூன்.14 ஆம் தேதி வரை 61 நாட்கள் புதுச்சேரி, காரைக்கால், ஏனாமில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

Similar News

News July 8, 2025

புதுவையில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

image

புதுவை எம்.ஜி.ஆர்.நகர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், நாளை (ஜூலை 9) மற்றும் நாளை மறுநாள் (ஜூலை 10) மதியம் 12 மணி முதல் 2 மணி வரையில் மூலக்குனம், டைமண்ட் நகர், மேரி உழவர்கரை, ஜான்குமார் நகர், பாலாஜி நகர், ஜெயாநகர், ரெட்டி யார்பாளையம், புதுநகர், வழுதாவூர் ரோடு, சண்முகாபுரம், சீனிவாசபுரம் அதனைச் சார்ந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைப்படுமென கூறப்பட்டுள்ளது.

News July 8, 2025

85 ஆண்டுகளுக்குப் பின் கோயில் கும்பாபிஷேகம்!

image

புதுவை கருவடிகுப்பத்தில் உள்ள சுடுகாட்டில் அரிச்சந்திர மகாராஜா கோயில் உள்ளது.1940ம் ஆண்டு 2வது கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பிறகு கும்பாபிஷேகம் நடக்கவில்லை. இந்நிலையில், 85 ஆண்டுகளுக்குப் பிறகு கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு கோயிலில் உள்ள வசிஷ்ட மகரிஷி, விஸ்வாமித்ரா மகரிஷி, மகாகால ருத்ர பைரவர், சந்திரமதி உடனுறை அரிச்சந்திர சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

News July 7, 2025

புதுவை: வங்கியில் வேலை! மாதம் ரூ.85,000 சம்பளம்

image

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் புதுவை உட்டபட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். இதற்கு <>இங்கே கிளிக்<<>> விண்ணப்பிக்கவும். மேலும் கடைசி நாள் ஜூலை 24ம் தேதி ஆகும். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!