News October 15, 2025
மீன்பாசி குத்தகைக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 85 ஏரிகளில் மீன்பாசி குத்தகைக்கு விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு நெ.62/56A, விழுப்புரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகிடலாம் என்றும், 04146-259329 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறியலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 15, 2025
விழுப்புரம் மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில் !

விழுப்புரம் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? TN Smart என்ற<
News October 15, 2025
விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு

விழுப்புரம் மாவட்டத்தின் மழையளவு விழுப்புரம் 30 மில்லி மீட்டர், கோலியனூர் 15 மில்லி மீட்டர், வளவனூர் 25 மில்லி மீட்டர், கெடார் 12 மில்லி மீட்டர், முண்டியம்பாக்கம் 19 மில்லி மீட்டர், நேமூர் 5 மில்லி மீட்டர், கஞ்சனூர் 15 மில்லி மீட்டர், திண்டிவனம் 5 மில்லி மீட்டர், மரக்காணம் 1 மில்லி மீட்டர், செஞ்சி 36 மில்லி மீட்டர், செம்மேடு 26 மில்லி மீட்டர், மனம்பூண்டி 26 மில்லிமீட்டர்.
News October 15, 2025
விழுப்புரம்: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

விழுப்புரம் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)