News December 24, 2025

மீனாட்சி கோயிலில் உண்டியல் வசூல் ரூ.1.24 கோடி

image

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், இதன் துணைக் கோயில்களின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான நா.சுரேஷ் தலைமை வகித்தாா். இதில் ரொக்கமாக ரூ.1,24,69,880-மும், பலமாற்று பொன் இனங்கள் 545 கிராமும், பலமாற்று வெள்ளி இனங்கள் 1,875 கிராமும், வெளிநாட்டு பணத் தாள்கள் 187-மும் காணிக்கையாகக் கிடைக்கப் பெற்றன.

Similar News

News January 24, 2026

மதுரைக்கு மாவட்டத்தில் புதிதாக மேம்பாலங்கள்?

image

தற்போது நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, கேள்வி நேரத்தில் மதுரைக்கு தெப்பக்குளம், விரகனூர் மற்றும் மாட்டுத்தாவணி ஆகிய பகுதிகளில் மேம்பாலம் அமைக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் எ.வ.வேலு மேற்குறிப்பிட்ட பகுதிகளில் பாலம் அமைக்க ஆய்வு பணிகள் முடிந்து அடுத்த வருடம் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். (இது குறித்து உங்கள் கருத்து)

News January 24, 2026

மதுரை: கொடூரமாக வெட்டி கொலை; 5 பேர் கைது

image

மேலூர், வெள்ளரிப்பட்டி முன்னமலைபட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன்(48), நேற்று முன்தினம் இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். பழிக்கு பழியாக நடைபெற்ற இக்கொலை தொடர்பாக மேலூர் போலீசார் அதே பகுதியை சேர்ந்த விஜய் சுந்தர்(29) அவரது நண்பர்கள் பிரசாந்த், கணேஷ் குமார் என்ற கருப்புசாமி, ஆண்டிச்சாமி, அஜித் குமார், ஆகிய 5 பேரை நேற்றிரவு கைது செய்தனர். பின் மேலூர் ஜேஎம்.கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

News January 24, 2026

மதுரை : EXAM இல்லை, போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

மதுரை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். இங்கு <>கிளிக்<<>> செய்து, விண்ணப்பிக்கலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!