News April 6, 2025
மீனாட்சி அலங்காரத்தில் பத்ரகாளியம்மன்

காஞ்சிபுரம் வணிகர் வீதி அருகிலுள்ள பத்ரகாளியம்மன் கோவிலில், நவராத்திரி விழா கடந்த மார்ச் 30ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, தினமும் மாலை 6 மணிக்கு அம்மன் பல்வேறு அலங்காரங்களில் அருள்பாலித்து வருகிறார். 7ஆம் நாள் விழாவான நேற்று முன்தினம் ஏப்ரல் 4ஆம் தேதி, மதுரை மீனாட்சியம்மன் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருள, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். கோவில் வளாகம் பக்தர்களால் களைகட்டியது.
Similar News
News April 9, 2025
சாதனைகள் படைத்த அரசு பள்ளி மாணவி, மாணவனுக்கு பாராட்டு

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பி.கே.எம்.போனிக்ஸ் ஷிட்டு ரியோ கராத்தே அசோசியேசன் தலைவர் முரளியிடம், கடந்த 4 ஆண்டுகளாக கராத்தே பயிற்சி பெற்று பல்வேறு தேசிய அளவிலான கராத்தேப்போட்டி மற்றும் மாநில அளவிலான டேக்வாண்டா மற்றும் சிலம்ப போட்டிகளில் தங்கம் வென்ற ஆற்காடு நாராயண சுவாமிப் பள்ளி மாணவி சரஸ்வதி & முசரவாக்கம் அரசுப்பள்ளி மாணவன் அறிவுநிதியை மாவட்ட எஸ்.பி. சண்முகம் பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
News April 9, 2025
ஊராட்சி மன்ற தலைவி, அவரது கணவர் மீது புகார்

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், தொழில் நிறுவனங்களை மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டதாகவும் அதிமுகவை சேர்ந்த மேவலூர் குப்பம் ஊராட்சி மன்ற தலைவி அபிராமி மற்றும் அவரது கணவர் ராஜேஷ் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து, ஊராட்சி மன்ற தலைவரின் அதிகாரத்தை பறிக்கும் வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
News April 8, 2025
வீட்டில் உறங்கும்போது மொபைல்போன் திருட்டு

காஞ்சிபுரம், மரக்காணத்தைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன்(25), இவர் ஒரகடம் அடுத்த, வாரணவாசி பகுதியில் வாடகைக்கு தங்கி, தொழிற்சாலையில் வேலை செய்கிறார். கடந்த 4ம் தேதி, தமிழ்செல்வன் அறையில் தூங்கி கொண்டிருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த டேனியல்நாத்(27), அறையில் நுழைந்து தமிழ்செல்வனின் மொபைல்போனை திருடி சென்றார். இதற்கு தமிழ்ச்செல்வன் புகாரளித்தபின், டேனியல்நாத் என்பவரை ஒரகடம் போலீசார் நேற்று கைது செய்தனர்.