News July 23, 2024
மீனவர்கள் சாலை மறியலால் 3மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

முத்துப்பேட்டை பகுதியில் உள்ள மீனவர்களுக்கு பிரதமர் கிசான் திட்ட நிதி வாங்கியதால் 543 மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணமாக 8000 வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து நேற்று 10 கிராம மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தம் செய்து ஆலங்காடு கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர். பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை தருவதாக கூறியதால் கலைந்து சென்றனர். இதனால் 3மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Similar News
News September 10, 2025
திருவாரூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (செப்.,10) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அலுவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல்துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவலர்களை அழைக்கலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News September 10, 2025
திருவாரூர் பள்ளிகளில் தொடங்கிய காலாண்டு தேர்வு

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இன்று காலாண்டு தேர்வு தொடங்கியது. மாநில பள்ளி கல்வித் துறையின் அட்டவணை படி 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தொடங்கி 25-ம் தேதி வரையிலும், 6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் 15-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன.
News September 10, 2025
திருவாரூர்: வங்கி கணக்கில் பணம் காணவில்லையா?

உங்கள் Bank Account-யில் திடீரென்று பணம் காணாமல் போகிறதா? போலி வங்கி லிங்க், யூபிஐ, ரிவார்டு மெசேஜ்கள், போலி வேலை வாய்ப்பு, ஷாப்பிங் செய்ய ஆசைப்பட்டு பணத்தை இழந்தால் மோசடியின் ஸ்கிரீன்ஷாட், SMS, E-mail போன்ற ஆதாரங்களை வைத்து, <