News July 9, 2025

மீனவர்களுக்கு மானியத்தில் படகு-கால அவகாசம் வழங்கல்

image

புதுச்சேரி பகுதியைச் சார்ந்த மீனவர்களுக்கு கண்ணாடி நுண்ணிழை கட்டுமரம், இயந்திரமில்லா கண்ணாடி நுண்ணிழை கட்டுமரம் 50 சதவீதம் மானிய விலையில் வழங்கும் திட்டத்தின் கீழ், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கடந்த 5ம் தேதி வரை பெறப்பட்ட நிலையில், மீனவர்களின் வேண்டுகோளுக்கிணங்க விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வரும் 25ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மீனவர் நலத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Similar News

News July 9, 2025

புதுவை: ஆசிரியர் பட்டய படிப்புக்கு நேரடி சேர்க்கை

image

புதுவை மாவட்ட கல்வி பயிற்சி நிறுவனத்தில் இந்த கல்வி ஆண்டிற்கான இரண்டாண்டு ஆசிரியர் பட்டயப் படிப்பில் காலியாக உள்ள இடங்கள் நேரடி சேர்க்கை மூலம் நாளை (ஜூலை 10) நிரப்பப்படவுள்ளது. இப்பட்டயப் படிப்பில் சேர விரும்புவோர் +2 தேர்வில் 50% சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் புதுவை லாஸ்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

News July 9, 2025

“இந்தியாவின் மொழி வளம் தனித்துவமானது” – ஆளுநர்

image

பாஷினி ஆப்’ அறிமுகம் மற்றும் துவக்கி தட்டாஞ்சாவடியில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன், “தொலைநோக்குப் பார்வை கொண்ட நம்முடைய பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா கனவை பிரதிபலிக்கிறது. இந்தியாவின் மொழி வளம் உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு தனித்துவமானது. மொழி அடிப்படையிலான இடைவெளியை இந்த ஆப் குறைக்கிறது.” என்று தெரிவித்தார்

News July 9, 2025

புதுவையில் விவசாய கூலி தொழிலாளி தற்கொலை

image

கிருமாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாய கூலி தொழிலாளி மாயவன். இவர் கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால், மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் தற்கொலை செய்ய முயன்ற நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!