News April 4, 2025
மீனவர்களுக்கு செயற்கைக்கோள் அலைபேசி

கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மீனவர் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், தருவைகுளம் சேர்ந்த 25 விசைப்படகு மீனவர்களுக்கு செயற்கைக்கோள் அலைபேசி கருவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கடலோர காவல் படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News April 9, 2025
தூத்துக்குடி இரவு ரோந்து போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
News April 9, 2025
61 மனுக்கள் நடவடிக்கைக்கு எஸ் பி உத்தரவு

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று வாரம் தோறும் புதன்கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 61 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றை ஆய்வு செய்த எஸ்பி, உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.
News April 9, 2025
சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு வழக்கில் உத்தரவு

தூத்துக்குடி சாத்தான்குளம் தந்தை, மகன் காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையில், தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்றும் சாட்சிகளின் வாக்குமூலம், குறுக்கு விசாரணை நடைபெற்ற ஆவனங்களை மனுதாரர் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.