News February 26, 2026

மீனவர்களுக்கு ஊக்கத்தொகை – கலெக்டர் அறிவிப்பு!

image

கட்டுமாவடி முதல் ஏனாதி வரை தற்போது கடல் ஆமைகள் இனப்பெருக்க காலம் என்பதால், கடற்கரை நோக்கி ஆமைகள் வரும் போது மீனவர்கள் வலையில் கடல் ஆமைகள் மற்றும் கடல் பசுக்கள் சிக்கி இருந்தால் அதனை உடனே கடலில் விட வேண்டும். இதுகுறித்து விழிப்புணர்வு கூட்டமும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வலையில் சிக்கும் ஆமைகளை விடுதலை செய்யும் மீனவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

Similar News

News February 26, 2026

புதுகை: ரூ.50,000 சம்பளத்தில் வேலை – கலெக்டர் அறிவிப்பு!

image

புதுகை மாவட்டத்தில் ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அழகில் மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி நிரப்பபட உள்ளது. இதற்கு ஓய்வு பெற்ற வங்கி அலுவலராக இருத்தல் வேண்டும். மாத ஊதியம் ரூ.50,000 வழங்கப்படும். இதற்கு மார்.5ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News February 26, 2026

புதுகோட்டை: பொதுத்தேர்வு – கலெக்டர் அறிவிப்பு!

image

புதுகை மாவட்டத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் 241 மையங்களில் 41,609 மாணவர்கள் எழுதயுள்ளனர். மார்- ஏப் மாதத்தில் நடைபெற உள்ள இத்தேர்வு பணிக்கு 3369 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 330 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் சிறப்பாக செய்யப்பட உள்ளன. எனவே மாணவர்கள் பயமின்றி தேர்வு எழுத கலெக்டர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.

News February 26, 2026

புதுக்கோட்டை மக்களே.. CM Cell-ல் புகார் அளியுங்கள்!

image

புதுக்கோட்டை மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். <>இங்கே க்ளிக்<<>> செய்து, உங்களது புகார்களை பதிவு செய்யுங்கள். அல்லது 1100 என்ற எண்ணுக்கு அழையுங்கள். முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதால், உங்கள் கோரிக்கைக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!