News December 7, 2025
மீண்டும் NDA கூட்டணியில் அமமுகவா? டிடிவி பதில்

அதிமுகவிலிருந்து பிரிந்தவர்கள் ஒன்றாக இணைய வேண்டும் என்று டெல்லி பாஜகவினர் மத்தியஸ்தம் செய்வதில் எந்த தவறும் இல்லை என டிடிவி தெரிவித்துள்ளார். இந்த கருத்து மூலம் மீண்டும் NDA கூட்டணியில் டிடிவி இணைகிறாரா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, கூட்டணி குறித்து நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. பொறுத்திருந்து பாருங்கள், தேர்தலுக்குள் பல மாற்றங்கள் நடக்கும் என்றார்.
Similar News
News April 1, 2026
மகளிருக்கு ₹8,000.. ஸ்டாலின் புதிதாக அறிவித்தார்

திமுகவின் ₹8,000 கூப்பன் தேர்தல் வாக்குறுதியை <<19515865>>விமர்சித்த EPS<<>>, திமுகவினர் கமிஷன் அடிக்கவே இந்த கூப்பன் திட்டம் என சாடியிருந்தார். இதற்கு விளக்கம் அளித்த ஸ்டாலின், ₹8,000 கூப்பனை பயன்படுத்தி பிடித்த கடையில் பிடித்த பிராண்ட் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார். என்ன வாங்க வேண்டும், எப்படி வாங்க வேண்டும் என்பதெல்லாம் உங்கள் சாய்ஸ்தான் என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
News April 1, 2026
தவாகவுக்கு கேமரா சின்னம்: 200 தொகுதிகளில் போட்டி?

வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு கேமரா சின்னத்தை ECI ஒதுக்கியுள்ளது. திமுக கூட்டணியிலிருந்து விலகிய வேல்முருகன் தனித்து போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக சுமார் 200 தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வுக்காக நேர்காணல் நடத்தி வருவதாகவும், அடுத்த சில நாள்களில் வேட்பாளர் பட்டியலை வெளியிடவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் எத்தனை முனை போட்டி என நீங்கள் நினைக்கிறீர்கள்?
News April 1, 2026
ரசிகர்களே ரெடியா.. IND அணியின் T20I அட்டவணை!

ஜூன் 26 முதல் ஜூலை 26 வரையிலான இந்திய அணியின் T20 அட்டவணையை BCCI வெளியிட்டுள்ளது ➥அயர்லாந்து தொடர்: 1-வது T20I: ஜுன் 26 | 2-வது T20I:ஜுன் 28 ➥இங்கிலாந்து தொடர்: 1-வது T20I:ஜூலை 1 | 2-வது T20I:ஜுலை 4 | 3-வது T20I:ஜூலை 7 | 4-வது T20I:ஜூலை 9 | 5-வது T20I:ஜூலை 11 ➥ஜிம்பாப்வே தொடர்: 1-வது T20I:ஜூலை 23 | 2-வது T20I:ஜூலை 25 | 3-வது T20I:ஜூலை 26.


