News January 30, 2026
மீண்டும் 16,000 பேரை நீக்கிய அமேசான்

US, UK, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 16,000 பேரை அந்நிறுவனம் வேலையில் இருந்து நீக்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவின் பெங்களூரு, சென்னை, ஹைதராபாத்தில் இருந்து அதிகபடியான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் அந்த ஊழியர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தரவும் அமேசான் முன்வந்துள்ளது. ஆட்குறைப்பு ஒருபக்கம் நடக்க மறுபுறம் பல ஆயிரம் கோடிகளை AI நிறுவனங்களில் அமேசான் செய்து வருகிறது.
Similar News
News February 15, 2026
இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குக: ஸ்டாலின்

40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் வசித்துவரும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க கோரி PM மோடிக்கு CM ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். குடியுரிமை விண்ணப்பங்களை பரிசீலிக்க தடையாக உள்ள முந்தைய நிர்வாக உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், நீண்ட கால விசா வழங்குதல் மீதும் மனிதாபிமான அடிப்படையில் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
News February 15, 2026
பிப்.17 முதல் டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

தொகுப்பூதிய பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதுவரை அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. எனவே, நாளை பணிநேரம் முடிந்ததும் கடை சாவியை டாஸ்மாக் நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டு, பிப்.17 முதல் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
News February 15, 2026
மகளிருக்கு மேலும் ₹5,000.. வந்தாச்சு ஹேப்பி நியூஸ்

பிப்.13-ல் மகளிர் வங்கிக் கணக்கில் ₹5,000 வரவு வைத்து தமிழக அரசு சர்ப்ரைஸ் கொடுத்தது. தற்போது, மேலும் மகிழ்ச்சியளிக்கும் வகையில் மீண்டும் ₹5,000 வழங்க அரசு திட்டமிட்டு வருகிறதாம். மகளிருக்கான கடனுதவி (அ) சுயதொழில் தொடங்கும் திட்டமாக இது இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கான, இறுதி வடிவம் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


