News November 22, 2025
மீண்டும் ரெக்க கட்டி பறக்க போகும் ‘அண்ணாமலை’

தமிழில் சூப்பர் ஹிட் அடித்த படங்களை ரீ ரிலீஸ் செய்வது இப்போது டிரெண்டாகி வருகிறது. மக்களும் பழைய படங்களை மீண்டும் திரையரங்கில் பார்த்து கொண்டாடுகின்றனர். அந்த வரிசையில் இப்போது ரஜினியின் அண்ணாமலை படம் மீண்டும் திரைக்கு வருகிறது. ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளையொட்டி , டிசம்பர் 12-ம் தேதி இப்படம் வெளியாகிறது. அசோக்கிற்கு எதிரான அண்ணாமலையின் போராட்டத்தை பார்க்க ரெடியா?
Similar News
News February 6, 2026
ஊடுருவல்காரர்களுக்கு பாதுகாப்பு.. PM மோடி காட்டம்

இந்திய இளைஞர்களின் உரிமைகளை ஊடுருவல்காரர்கள் தட்டிப் பறிப்பதாக PM மோடி கூறியுள்ளார். ஊடுருவல்காரர்களை எதிர்க்கட்சிகள் பாதுகாப்பதாக குற்றஞ்சாட்டிய PM மோடி, அவர்கள் பழங்குடியினரின் நிலங்களை பறித்துவிடுவதாகவும் தெரிவித்தார். மேலும், எதிர்க்கட்சிகள் செய்யும் தவறுகளை சரிசெய்வதிலேயே பாஜக அரசுக்கு நேரம் போய்விடுவதாகவும், இதற்கு எதிர்க்கட்சிகள் பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் PM மோடி குறிப்பிட்டார்.
News February 6, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால்
▶இயல்: அரசியல்
▶அதிகாரம்: மடியின்மை
▶குறள் எண்: 603
▶குறள்:
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.
▶பொருள்: அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய் விடும்.
News February 6, 2026
திமுக ஆட்சியில் மாணவர்கள் ரவுடிகளாக மாற்றம்: நயினார்

மதுரையில் மாணவர்கள் பெட்ரோல் குண்டு வீசியதுடன், பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தது நெஞ்சை உலுக்குவதாக நயினார் கூறியுள்ளார். தனது X பதிவில், CM ஸ்டாலினின் ஆட்சியில் மாணவர்கள் ரவுகளாக உருமாறுவதாகவும், இது சமூகத்திற்கே பேராபத்தானது எனவும் நயினார் விமர்சித்துள்ளார். நடவடிக்கை எடுக்க வேண்டிய அமைச்சர் அன்பில் மகேஷ் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது எனவும் அவர் கூறியுள்ளார்.


