News December 15, 2025
மீண்டும் மழை வெளுக்கப் போகுது.. வந்தது அலர்ட்

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக மழை குறைந்து, பல இடங்களில் பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்நிலையில், நாளை(டிச.16) முதல் டிச.21 வரை தமிழகம், புதுவையில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD அலர்ட் கொடுத்துள்ளது. சென்னையில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தென் கடலோர மாவட்ட மீனவர்கள் டிச.18 வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News December 17, 2025
புதுச்சேரியில் பென்ஷன் சங்கத்தினர் போராட்டம்

புதுச்சேரியில் பென்ஷன் சங்கம் சார்பில் இன்று சுதேசி பஞ்சாலை அருகில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசு பென்ஷன் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும்; அனைத்து ஓய்வூதியர்களுக்கும் பாரபட்சமின்றி ஒன்று முதல் எட்டாவது ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
News December 17, 2025
திண்டுக்கல் டூ சபரிமலைக்கு ரயில் வழித்தடம்?

தமிழகத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்கின்றனர். இந்நிலையில், தமிழக பக்தர்கள் பயன்பெறும் வகையில், திண்டுக்கலில் இருந்து சபரிமலைக்கு ரயில் தடம் அமைக்க வேண்டும் என்று தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் மக்களவையில் கோரிக்கை விடுத்தார். உடனே மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இக்கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
News December 17, 2025
₹62 லட்சம் கோடி சொத்து… புதிய சாதனை படைத்த மஸ்க்!

எலான் மஸ்க், $684 பில்லியன் (சுமார் ₹62 லட்சம் கோடி) சொத்து மதிப்பை தாண்டி, உலகின் முதல் $600 பில்லியனர் என்ற சாதனையை படைத்துள்ளார். உலகின் பெரும் பணக்காரர்களான ஜெஃப் பெசோஸ், மார்க் சக்கர்பெர்க், ஜென்சன் ஹுவாங்க் ஆகிய 3 பேரின் ஒட்டுமொத்த சொத்தை விட, மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. $800 பில்லியன் மதிப்பில் SpaceX, பங்குச்சந்தையில் வெளியிடப்படும் என்ற தகவலே சொத்து உயர்வுக்கு காரணம்.


