News December 22, 2025
மீண்டும் மஞ்சள் பை விருது – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

“மீண்டும் மஞ்சப்பை” பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் விதமாக சுற்றுச்சூழலை பாதுகாக்க வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள், 3 வணிக நிறுவனங்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது. மேலும் அதற்கான விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளம் https://theni.nic.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 15.01.2026 ஆகும்.
Similar News
News December 23, 2025
தேனி: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

தேனி மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் <
News December 23, 2025
தேனி: தங்கையுடன் பைக்கில் சென்றவருக்கு விபத்து

கூடலூர் பகுதியை சேர்ந்தவர் சரண்யா (32). இவர் நேற்று (டிச.21) அவரது இருசக்கர வாகனத்தில் அவரது தங்கை சுகன்யாவை (29) அழைத்துக் கொண்டு உத்தமபாளையம் பகுதியில் சென்றுள்ளார். அப்பொழுது பாக்யராஜ் என்பவர் ஓட்டி வந்த சரக்கு ஆட்டோ இவர்கள் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் சகோதரிகள் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு.
News December 23, 2025
ராணுவம் முன்னாள் படை வீரர்களுக்கு சிறப்பு குறைதீர் முகாம் – ஆட்சியர்

தேனி மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் / சார்ந்தோர்கள் / படைப்பணியில் பணிபுரிவோர்கள் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் டிச.29 அன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் மாலை 3.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது என தேனி ஆட்சியர் அழைப்பு விடுத்திருக்கிறார்.


