News March 23, 2025

மீண்டும் மஞ்சள் பை விருது; ரூ.10 லட்சம் பரிசுத்தொகை

image

ராமநாதபுரத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ்சள் பை பயன்படுத்துபவர்கள் மீண்டும் மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் உள்ள பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டினை தடுத்து மஞ்சப்பை பயன்படுத்தும் நிறுவனங்களை ஊக்குவிக்க இவ்வாறு அறிவிக்கப்பட்டது. *ஷேர்

Similar News

News March 25, 2025

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

 ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் இன்று இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும். *இரவு வேலைக்கு செல்வோருக்கு ஷேர் செய்து உதவுங்கள்*

News March 24, 2025

காவல்துறையால் எச்சரிக்கப்பட்ட சுற்றுலா பயணி

image

ராமேஸ்வரம், தனுஷ்கோடி அரிச்சல்முனை அருகே இன்று(மார்ச்.24) தடை செய்யப்பட்ட பகுதியில் நீந்திய அமெரிக்க நாட்டு சுற்றுலா பயணியை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பினர். வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்வதால் சுற்றுலா பயணியின் நலனை கருத்தில் கொண்டு போலீசார் செயல்படுகின்றனர் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். *ஷேர்

News March 24, 2025

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் மார்ச் 2025ம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.03.2025 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் தலைமையில் நடைபெற உள்ளது. விவசாயிகளும், விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட பொருள்களை விவாதிக்கலாம். *ஷேர் பண்ண மறக்காதீர்

error: Content is protected !!