News February 27, 2026
மீண்டும் போட்டியிட விருப்ப மனு: PTR

10 ஆண்டுகள் மக்கள் பணியில் ஈடுபட்டு மீண்டும் தனது தொழில்முறைக்கு திரும்புவேன் என்று கூறியிருந்த PTR, மீண்டும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். தனது தொகுதி மக்கள் தந்த ஆதரவும், CM ஸ்டாலினின் அமைச்சரவை வாய்ப்பும் இந்த முடிவுக்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பொதுவாழ்வை தொடர முடிவு செய்துள்ள அவர், மதுரை மத்திய தொகுதி மக்களிடம் மீண்டும் ஆதரவு கோருவேன் என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News March 1, 2026
திமுகவின் பிரசாரத்தை முறியடிக்க பாஜகவின் திட்டம்

தேர்தலையொட்டி தமிழகத்திற்கு அடுத்தடுத்து மத்திய அமைச்சர்கள் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. TN-ஐ மத்திய அரசு வஞ்சிப்பதாக CM ஸ்டாலின் கூறும் நிலையில், 3 மாவட்டங்களுக்கு தலா ஒரு அமைச்சர் வீதம் அனுப்பி PM வீடு கட்டும் திட்டம் உள்ளிட்டவை குறித்து பயனாளிகளிடம் எடுத்துரைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் மத்திய அரசுக்கு நல்ல பெயர் உண்டாகி, அது வாக்காக மாறும் என கணக்கிடப்பட்டுள்ளது.
News March 1, 2026
சங்கீதாவின் சொத்து மதிப்பு இவ்வளவா?

விஜய்யிடம் பணம் பறிக்கும் நோக்கில் சங்கீதா விவாகரத்து கோருவதாக சிலர் SM-ல் அவதூறு பரப்புகின்றனர். ஆனால், பல ஆண்டுக்கு முன்பு லண்டனுக்கு இடம்பெயர்ந்த சங்கீதா, அங்குள்ள கோடீஸ்வரர்களில் ஒருவர் என்றும் அவரது சொத்து மதிப்பு ₹400 கோடி எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், மனரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பதாலேயே சங்கீதா விவாகரத்து கோரியிருப்பதாக அவருக்கு ஆதரவாக நெட்டிசன்கள் பதிவிடுகின்றனர்.
News March 1, 2026
போரில் சிக்கித் தவிக்கும் 80 லட்சம் இந்தியர்கள்

US, இஸ்ரேல் – ஈரான் போரினால் மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் 80 லட்சம் இந்தியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. UAE-35.5 லட்சம், சவுதி அரேபியா-24.6 லட்சம், கத்தார்-8.4 லட்சம், குவைத்-9.9 லட்சம், ஜோர்டன்-17,000, இஸ்ரேல்-20,000, ஈரான்-10,000 இந்தியர்கள் உள்ளனர். இந்தியர்களை மீட்க தூதரக ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதுடன், போர் நிலவரத்தை வெளியுறவு அமைச்சகம் கண்காணித்து வருகிறது.


