News November 2, 2025
மீண்டும் புயல் சின்னம்.. மழை பொளந்து கட்டும்

வங்கக் கடலில் நாளை(நவ.2) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதாக IMD கணித்துள்ளது. இன்று நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது. இந்நிலையில், நாளை முதல் நவ.7-ம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் 2 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் குடையை மறக்க வேண்டாம்!
Similar News
News November 2, 2025
NDA ஆட்சியில் அதிக தனியார்மயமாக்கல்: பிரியங்கா

NDA ஆட்சியில் தனியார்மயமாக்கல் அதிகரித்துள்ளதாக MP பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். பொதுத்துறையை, தனது நண்பர்களிடம் PM மோடி ஒப்படைத்துவிட்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். நேரு, இந்திரா காந்தி ஆகியோரை விமர்சிக்கும் பாஜக தலைவர்கள், நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை குறித்து வாய் திறப்பதில்லை என்றும் கடுமையாக சாடியுள்ளார். பிஹார் தேர்தல் பரப்புரையில் இருதரப்பும் கடுமையாக தாக்கி பேசி வருகின்றன.
News November 2, 2025
ஜடேஜாவை வாங்க ஆர்வம் காட்டிய RR

IPL 2026 ஏலம் நடைபெறவுள்ள நிலையில், வீரர்களை மாற்றும் பணிகளில் அணிகள் மும்முரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், ஜடேஜாவை வாங்க RR அணி நிர்வாகம் ஆர்வம் காட்டியுள்ளது. ஆனால், ஜடேஜாவை கொடுக்க முடியாது என CSK கறாராக சொல்லிவிட்டதாம். ’ஜட்டு பாய் CSK சொத்து’ என ரசிகர்கள் சிலாகிக்கின்றனர். மேலும், RR அணிக்கு ட்ரிஸ்டன் ஸ்டப்ஸை கொடுத்துவிட்டு, சஞ்சு சாம்சனை வாங்க DC அணி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
News November 2, 2025
இந்த தீர்ப்பு பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?

‘இனிமேல் இந்த மாதிரி வாழ்க்கைல எப்பவும் நினச்சி கூட பார்க்கக்கூடாது’ என்ற எண்ணம் தான் மலேசியாவைச் சேர்ந்த 35 வயது நபருக்கு தோன்றியிருக்கும். வளர்ப்பு மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக, அவருக்கு 104 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 18 பிரம்படி தண்டனையும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட தண்டனைகள் பற்றி உங்கள் கருத்து என்ன?


