News November 6, 2025
மீண்டும் பார்முக்கு திரும்புவாரா கில்?

இந்திய T20 அணியின் Vice Captain சுப்மன் கில், ஆஸி.,யில் தொடர்ந்து தடுமாறி வருகிறார். ODI தொடரில் வெறும் 43 ரன்களும், நடந்து முடிந்துள்ள 3 T20 போட்டிகளில் 57 ரன்களும் மட்டுமே எடுத்துள்ள, அவரின் தேர்வு குறித்து கடும் விமர்சனங்கள் எழத் தொடங்கிவிட்டன. அவருக்கு பதிலாக, ஓப்பனராக ஜெய்ஸ்வால் அல்லது சாம்சனை கொண்டுவரலாம் என்ற கருத்துக்களும் வலுத்துள்ளது. விமர்சனங்களுக்கு இன்று முற்றுப்புள்ளி வைப்பாரா?
Similar News
News November 6, 2025
பிஹார் தேர்தல்: 9 மணி வரை 13% வாக்குப்பதிவு

பிஹாரில் உள்ள 243 தொகுதிகளில், முதல்கட்டமாக 121 தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏராளமான மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வரும் நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 13% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் கட்ட தேர்தலில் 3.5 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
News November 6, 2025
சற்றுமுன்: ஒரே நாளில் விலை ₹1000 உயர்ந்தது

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ₹1 உயர்ந்து ₹164-க்கும், கிலோ வெள்ளி ₹1,000 உயர்ந்து ₹1,64,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து, வரும் நாள்களில் விலையில் மிகப்பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
News November 6, 2025
கூட்டநெரிசல் மரணங்களால் தான் RCB விற்கப்படுகிறதா?

18 ஆண்டுகள் காத்திருப்பிற்கு பின், கோப்பையை வென்ற RCB விற்பனைக்கு வந்துள்ளது. கடந்த ஜூன் மாதம், வெற்றி கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த கூட்டநெரிசல் மரணங்கள் தான் இதற்கு காரணமா என்ற கேள்வி எழாமல் இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக, சட்டப்பூர்வ நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவே, RCB அணியின் உரிமம் கைமாற்றிவிடப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. பிர்சனை இருப்பினும், RCB அணியை வாங்க பலமுனை போட்டி நிலவுகிறதாம்.


