News December 5, 2025
மீண்டும் செங்கோட்டையன் செய்த சம்பவம் (PHOTO)

ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி செங்கோட்டையன், ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தியுள்ளார். தவெகவில் இணைந்த பிறகும் அவர் MGR, ஜெயலலிதாவின் போட்டோவை பயன்படுத்துவது அரசியல் களத்தில் விமர்சனத்தை எழுப்பியுள்ளது. ஆனாலும், மீண்டும் மீண்டும் MGR, ஜெயலலிதா விவகாரத்தில் அவர் விடாபடியாக உள்ளார். இது குறித்து உங்கள் கருத்து?
Similar News
News December 6, 2025
பிரபல நடிகர் காலமானார்

பிரபல நடிகர் கேரி-ஹிரோயுகி டகாவா(75) காலமானார். ஜப்பானில் பிறந்த இவர் ஹாலிவுட், ஜப்பானிய மொழிகளில் வெளிவந்த பல வெற்றி படங்களில் சண்டை காட்சிகளில் அசத்தியவர். நமக்கெல்லாம் ஒரு ஹீரோவாக ஜாக்கிசான் எப்படியோ, அப்படி வில்லனாக வந்து இந்திய ரசிகர்களின் மனங்களை வென்றவர். Mortal Kombat, Mortal Kombat 11 உள்ளிட்ட ஏராளமான படங்களில் புகழ் பெற்ற டகாவாவின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
News December 6, 2025
இந்தியா மிக முக்கிய கூட்டாளி: USA

USA வெளியிட்டுள்ள புதிய தேசிய பாதுகாப்பு கொள்கையில், இந்தியாவை ‘முக்கிய கூட்டாளி’ நாடாக அறிவித்துள்ளது. பொருளாதாரம், தொழில்நுட்பம், வணிகம் ஆகியவற்றில் இந்தியா முக்கிய சக்தியாக உள்ளது. அத்துடன் இந்தோ-பசுபிக்கில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பதால் IND-USA இணைந்து செயல்படுவது இன்றியமையாதது என கூறப்பட்டுள்ளது. மேலும், புடினின் இந்திய பயணத்திற்கு பிறகு USA இவ்வாறு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 6, 2025
டிச.19-ல் இலவச லேப்டாப் வழங்கும் CM ஸ்டாலின்

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை வரும் 19-ம் தேதி CM ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். நந்தனத்தில் நடைபெறவுள்ள விழாவில் முதற்கட்டமாக 20 மாணவர்களுக்கு CM ஸ்டாலின் லேப்டாப் வழங்க உள்ளார். 2026 பிப். மாத இறுதிக்குள் 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க அரசு 3 நிறுவனங்களுக்கு டென்டர் ஒதுக்கீடு செய்துள்ளது.


