News April 6, 2024
மீண்டும் களம் இறங்கும் தொகுதி மீட்புக் குழு

புதுக்கோட்டை மக்களவை தொகுதியில் 2009ஆம் ஆண்டு தொகுதி மீட்புக் குழு தொடங்கப்பட்டது.மேலும் குழுவினால் 2009ஆம் ஆண்டு நாட்டில் முதல் முறையாக நோட்டாவிற்கு 15 ஆயிரம் வாக்குகள் விழுந்தன. 2014இல் 51 ஆயிரம் வாக்குகளும்,2019இல் 43 ஆயிரம் வாக்குகளும் தொகுதி மீட்புக் குழு மூலமாக நோட்டாவிற்கு விழுந்தன.இந்த நிலையில் மீண்டும் தொகுதி மீட்புக் குழு தற்போது களமிறங்கி நோட்டாவிற்கு தீவிர பரப்புரை செய்துவருகின்றனர்
Similar News
News November 22, 2025
புதுகை: பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி நகை பறிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சண்முகநாதபுரத்தைச் சேர்ந்தவர் ராஜலெட்சுமி(45). புதுகையில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வரும் இவர். வியாழன் இரவு பேருந்தில் ஊருக்கு சென்றுள்ளார். பேருந்திலிருந்து இறங்கி ஊருக்கு நடந்து சென்றபோது மர்ம நபர்கள் அவரது முகத்தில் மிளகாய் பொடியை தூவி, அவர் அணிந்திருந்த 6 சவரன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து ஆலங்குடி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 22, 2025
புதுவையில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா தேனூர் அருகே தச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் மாதீஷ்(16). இவர் தச்சம்பட்டியில் உள்ள தனது பாட்டியின் வீட்டில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று 21/11/2025 ஆம் தேதி இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 22, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (நவ.,21) இரவு 10 மணி முதல், நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள். இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


