News December 8, 2025
மீண்டும் ஆட்சியர் தலைமையில் காப்பி வித் கலெக்டர்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காபி வித் கலெக்டர் (Coffee With Collector) என்ற 209- வது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்கள்(தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) கீழ் மீட்கப்பட்ட 11 வளரிளம் பருவ தொழிலாளர்களுடன் ஆட்சியர் சுகபுத்ரா கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி, உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார்.
Similar News
News December 10, 2025
விருதுநகரில் வக்கீல் சேவை இலவசம்! தெரிஞ்சிக்கோங்க…

விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.விருதுநகர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04563-260310
2.உயர்நீதிமன்ற மதுரை கிளை : 0452-2433756
3.Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 10, 2025
விருதுநகர்: ரூ.6 லட்சம் வரை மானியம்.. நேரில் செல்லுங்கள்

தமிழக அரசு உழவர் நல சேவை மையம் அமைக்க 3 முதல் 6 லட்ச ரூபாய் வரை மானியம் வழங்குகிறது. மீதம் தொகைக்கு வங்கி கடனும் ஏற்பாடு செய்து தரப்படுகிறது. இது தொடர்பாக, வேளாண் இயக்குனர் கூறுகையில், காரியாபட்டி வட்டாரத்தில் வேளாண் சார்ந்து படித்தவர்கள், வேளாண் பொருட்கள் விற்பனை, வேளாண் சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் மாவட்ட வேளாண் உதவி மைய அலுவலகத்தை நேரில் அணுகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 10, 2025
காலை உணவு திட்டம் வழங்க இடங்கள் தேர்வு

விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் தூய்மை பணியில் 300 தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் இடங்கள் தேர்வு செய்யும் பணி நகராட்சி கமிஷனர் முன்னிலையில் நடைபெற்றது. 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்தக்காரர் மூலம் சமைத்து தூய்மை பணியாளர்களுக்கு டிச.22 முதல் உணவு வழங்கப்பட உள்ளது.


