News March 3, 2026
மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.. ஓபிஎஸ் அதிர்ச்சி

OPS திமுகவில் இணைந்த நிலையில், அவரது ஆதரவாளர்கள் மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர். அந்த வகையில், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியை தொடர்ந்து செஞ்சி வே. ஏழுமலையும் அதிமுகவில் இணைந்துள்ளார். EPS-ஐ நேரில் சந்தித்து அவர் மீண்டும் தாய் கழகம் திரும்பியுள்ளார். விழுப்புரம், தி.மலை மாவட்டங்களில் முக்கிய முகமாக அறியப்படும் ஏழுமலை, அதிமுக சார்பில் MP, MLA உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார்.
Similar News
News April 1, 2026
பாஜக, அதன் அடிமை கூட்டத்துக்கு எரிச்சல்: ஸ்டாலின்

திமுக தேர்தல் அறிக்கை சூப்பர் ஸ்டாராக விளங்குவதாக திருச்சியில் ஸ்டாலின் பேசியுள்ளார். எல்லா வகையிலும் TN டாப்பில் இருப்பது பாஜகவுக்கும் அதன் அடிமை கூட்டத்துக்கும் எரிச்சலை உண்டாக்கி இருப்பதாக பேசிய அவர், TN கலவர பூமியாக மாறாமல் இருக்க NDA கூட்டணியை வேரோடு வீழ்த்த வேண்டும் என்றார். மேலும், TN-ல் சாதி, மத கலவரங்களை உருவாக்க நினைக்கும் பாஜகவின் சூழ்ச்சியை முறியடித்திருப்பதாகவும் பேசியுள்ளார்.
News April 1, 2026
படுத்த படுக்கையாக பாரதிராஜா.. கண்ணீர் PHOTO

நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பாரதிராஜா, சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவர் ஹாஸ்பிடல் படுக்கையில் இருக்கும் போட்டோஸ் வெளியாகி ரசிகர்களை கண்கலங்கச் செய்துள்ளது. ‘மீண்டு வாருங்கள் சார்’ என நெட்டிசன்கள் SM-களில் பதிவிட்டு வருகின்றனர். முன்னதாக, சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் பாரதிராஜாவை நேரில் நலம் விசாரித்து வருகின்றனர்.
News April 1, 2026
வீட்டுக்கு 1 கிலோ தங்கம், ஹெலிகாப்டர் தருவேன்: சீமான்

வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர், ஒரு கிலோ தங்கம் நானும் கொடுப்பேன் என பிரசார கூட்டத்தில் சீமான் கூறியுள்ளார். ’நான் சொல்வதை கேட்பதற்கு இனிக்கிறதா, இதுதான் காதில் தேன் ஊற்றுவது’ என கிண்டலாக பேசிய அவர், இதெல்லாம் எப்படி தர முடியும் என்று என்னிடம் கேட்க முடியாது என பேசியுள்ளார். மற்றவர்கள் எப்படி ₹2,000 ₹3,000 கொடுப்பார்களோ அப்படித்தான் நானும் கொடுப்பேன் என்றார். <<-se>>#TNElection2026<<>>


