News January 4, 2026
மியான்மரில் ராணுவ ஆதரவு கட்சி வெற்றி!

ராணுவ ஆட்சி நடைபெறும் மியான்மர் நாட்டில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தலில், ராணுவத்தின் நேரடி ஆதரவு பெற்ற USDP கட்சி, தேர்தல் நடந்த 40 இடங்களில் 38-ல் வென்றுள்ளது. இந்த தேர்தலில் ஆங் சாங் சூச்சியின் கட்சி உள்ளிட்ட 40 கட்சிகள் போட்டியிட தடைவிதிக்கப்பட்டதால், இது கண்துடைப்பு என விமர்சிக்கப்படுகிறது. சர்வதேச அழுத்தம் காரணமாகவே தேர்தல் நடத்த ராணுவ அரசு இறங்கி வந்துள்ளது.
Similar News
News February 3, 2026
சென்சார் போர்டு தேவையே இல்லை: சுமன்

சென்சார் போர்டு இருப்பதே இப்போது தேவையில்லாதது என நடிகர் சுமன் தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் சினிமாவை மட்டும் தான் பார்த்தார்கள் என்ற அவர், ஆனால் இன்று செல்போனிலேயே எல்லாவற்றையும் பார்க்கின்றனர் எனவும், ஆபாசமும் வன்முறையும் அதிகம் உள்ள வெப்சீரிஸுக்கு சென்சாரே இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், மொபைல், ஓடிடி என அனைத்துக்கும் சென்சார் வேண்டும். இல்லையென்றால் அது தேவையே இல்லை எனவும் கூறியுள்ளார்.
News February 3, 2026
பனிமூட்டம்.. இந்த 7 மாவட்ட மக்களே உஷார்

தமிழகத்தில் பனியின் தாக்கம் மேலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், நாளை நீலகிரி, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் இருக்கும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. இதனால், அதிகாலை நேரத்தில் இருசக்கர வாகனங்களில் வெளியே செல்வதை முடிந்தளவு தவிருங்கள். உங்கள் ஊரில் பனியின் தாக்கம் உள்ளதா நண்பர்களே?
News February 3, 2026
பொதுத்தொகுதியில் களமிறங்கும் ஜான் பாண்டியன்?

தமமுக தலைவர் ஜான் பாண்டியன், வரும் தேர்தலில் பொதுத்தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2021-ல் எழும்பூர் (தனி), 2024-ல் தென்காசி (தனி) தொகுதியில் போட்டியிட்டார். தற்போது NDA கூட்டணியிலுள்ள அவர், தென்காசி, வாசுதேவநல்லூர், ஸ்ரீவில்லிபுத்தூர், கடையநல்லூர் உள்ளிட்ட தொகுதிகளை கேட்டுள்ளதாகவும், இதில் ஒரு பொதுத்தொகுதியில் அவர் களமிறங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


