News October 29, 2024
மின் விபத்தை தவிர்க்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு
பருவமழை காலத்தில் மின் விபத்துகளை தவிர்க்கவும், மின் உபகரணம் பழுதடைவது குறித்த தகவல்களை வாரியத்தில் தெரிவிக்க அலைபேசி எண்களை மேற்பார்வை பொறியாளர் பத்மாவதி தெரிவித்துள்ளார். அதன்படி உசிலம்பட்டி கோட்டம் – 9445852888, திருமங்கலம் கோட்டம் – 9445852828, சமயநல்லூர் கோட்டம் – 9445852900, மதுரை கிழக்கு கோட்டம் – 9445852848 எண்களில் பொதுமக்கள் தங்கள் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News November 20, 2024
மதுரையில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
மதுரை உட்பட 13 மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் இன்று(நவ.,20) இதுவரை 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெளியில் செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.
News November 20, 2024
மதுரையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
மதுரையில் மேம்பால பணிகளுக்காக கோரிப்பாளையம், செல்லூர் பகுதிகளில் இன்று(நவ.20) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி நத்தம் சாலை, அழகர்கோவில் சாலையில் இருந்து வரும் அரசு பஸ்கள், கார்கள் மற்றும் இரு சக்கரவாகனங்கள் மட்டும் அவுட் போஸ்ட் வழியாக தமுக்கம் சந்திப்பு வந்து, அங்கு வலதுபுறம் திரும்பி கோரிப்பாளையம் சந்திப்பு வழியாக ஏ.வி. பாலம் செல்ல வேண்டும்.
News November 20, 2024
சாலை விபத்துகளில் 137 பேர் உயிரிழப்பு
மதுரை பாத்திமா கல்லூரி முதல் சமயநல்லூர் வரை கடந்த 6 ஆண்டுகளில் 542 விபத்துகள் நடைபெற்றுள்ளது. அதில் 137 பேர் மரணமடைந்துள்ளதாகவும், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சமயநல்லூர் டிஎஸ்பி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சாலை விபத்துக்களை தடுக்க கோரி செந்தில்குமார் தாக்கல் செய்த பொதுநல மனுவில், போதிய தெருவிளக்கு வசதிகள் இல்லாதது விபத்துகளுக்கு காரணம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.