News August 11, 2025

“மின் கணக்கீட்டாளர்களுக்கு வார்னிங்”

image

சென்னை அருகே அம்பத்தூரில் வீட்டு இணைப்பு ஒன்றுக்கு அண்மையில் பலமடங்கு மின்கட்டணம் வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், சரியான நேரத்தில் மின் இணைப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மின்கணக்கீட்டு பணியாளர்கள் அதிக கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என்றும் மின் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News August 13, 2025

APPLY NOW: சென்னை கூட்டுறவு துறையில் வேலை

image

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு துறையில் இயங்கும் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 2,500 காலி பணியிடங்கள் உள்ளன. அதில் சென்னையில் மட்டும் 194 பணியிடங்கள் உள்ளன. டிகிரி முடித்தவர்கள் இந்த <>இணையதளத்தில் <<>>வரும் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 044-2461 6503, 2461 4289 எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்கள்

News August 13, 2025

சென்னையில் 5,970 பேருக்கு பாதிப்பு… எச்சரிக்கை

image

சென்னையில், 1.80 லட்சம் தெரு நாய்கள் உள்ளன. சென்னை போன்ற குறிப்பிட்ட மாநகராட்சிகளை தவிர, மற்ற நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை. கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் வரை சென்னையில் 5,970 பேர் நாய்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். நல்வாய்ப்பாக ரேபிஸ் தொற்றால் உயிரிழப்பு எதுவும் இல்லை. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்.

News August 13, 2025

சென்னையில் மின்தடை அறிவிப்பு!

image

இன்று (ஆகஸ்ட் 13) அடையாறு, காந்தி நகர், கொட்டிவாக்கம், காவேரி நகர், ECR சாலை, பாலவாக்கம், திருமுல்லைவாயல், கோணிமேடு, பெரம்பூர், நாளை (ஆகஸ்ட் 14) கீழ்பாக்கம், மேடவாக்கம், தரமணி, சர்தார்பட்டேல் சாலை, பள்ளிப்பேட்டை, செம்பரம்பாக்கம், நசரத்பேட்டை, வரதராஜபுரம், தாம்பரம், இரும்புலியூர், வேளச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!