News February 28, 2026
மின்னிய தங்கமும் வைரமும்.. நகைக்கு மட்டும் இவ்வளவா?

விலையுயர்ந்த வைரங்களையும், தங்கத்தாலும் இழைக்கப்பட்ட நகைகளையும் திருமணத்தின் போது விஜய், ரஷ்மிகா அணிந்திருந்தனர். ஹைதராபாத்தில் 10 மாதங்கள் செதுக்கப்பட்டு பிரத்யேகமாக இவை உருவாக்கப்பட்டதாம். ரஷ்மிகா தாலி, வளையல்கள், நெக்லஸ் என சுமார் 2 கிலோ எடை கொண்ட 11 வகையான நகைகளை அணிந்திருந்தார். இவை ₹3 – 5 கோடி மதிப்பு கொண்டவையாம். விஜய் ₹2 கோடி மதிப்புடைய 1 கிலோ எடையுள்ள நகைகளை, அணிந்திருந்தாராம்.
Similar News
News February 28, 2026
பண மழை கொட்டும் 4 ராசிகள்

குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைவதால் 4 ராசியினருக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறதாம். அதன்படி, *மேஷம்: குழந்தை பாக்கியம் இல்லாதோருக்கு நற்செய்தி வரும். *கடகம்: கார், வீடு வாங்கும் யோகம் உண்டாகும். *விருச்சிகம்: புதிய தொழில் தொடங்க நல்ல வாய்ப்பு. பணியில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். *மகரம்: குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். நிதி நிலைமை சீராகும்.
News February 28, 2026
ஈரானின் முக்கிய தளபதியை கொன்ற இஸ்ரேல்

ஈரானின் முக்கிய தளபதி முகமது பக்போர் வான்வெளி தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஈரானின் மிகவும் சக்திவாய்ந்த நபர்களில் ஒருவரான இவர், 8 மாதங்களுக்கு முன்பு தான் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தளபதியாக பொறுப்பேற்றார். சமீபத்தில் கூட US & இஸ்ரேலை எச்சரித்திருந்த அவர், ஈரானை தாக்கும் தப்புக் கணக்கு போடவேண்டாம் என கூறியிருந்தார். இந்நிலையில் இன்று அவர் கொல்லப்பட்டுள்ளார்.
News February 28, 2026
டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு கூடுதல் பொறுப்பு!

லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) இயக்குநராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆயுதப்படை டிஜிபியான அவருக்கு தற்போது கூடுதல் பொறுப்பாக இப்பதவி வழங்கப்பட்டுள்ளது. டேவிட்சன் உள்பட 20 IPS அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து TN அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜெயராமன், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை SP-க்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


