News December 12, 2025

மின்னணு வாக்குப்பதிவு சேமிப்பு கிடங்கில் ஆட்சியர் ஆய்வு

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக வளாகத்திலுள்ள மின்னணு வாக்குப்பதிவு சேமிப்பு கிடங்கில், வாக்குபதிவு இயந்திரங்களை (EVMs and VVPATs) பெங்களுர் பெல் (BEL) நிறுவன பொறியாளர்கள் மூலம் நடைபெறும் முதல் நிலை சரிபார்க்கும் (FIRST LEVEL CHECKING) பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இன்று நேரில் பார்வையிட்டார்.

Similar News

News December 13, 2025

நீலகிரி: ஆண் குழந்தை இருந்தால் ரூ.3,14,572 ?

image

நீலகிரி மக்களே.., ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

News December 13, 2025

உதகை அருகே அரசு பேருந்து விபத்து!

image

நீலகிரி: உதகையிலிருந்து பெந்தட்டி கிராமம் நோக்கி 40 பேருடன் சென்ற பேருந்து, பாரஸ்ட் கேட் பகுதியில் எதிரே வந்த லாரிக்கு இடம் கொடுக்கும் போது அருகிலிருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. மின்கம்பம் பேருந்தின் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் தீங்கு ஏற்படவில்லை. சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

News December 13, 2025

அருவங்காடு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்!

image

குன்னூர், பழைய அருவங்காடு பகுதிகளில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. சமீபகாலமாக இங்குள்ள வளர்ப்பு நாய்கள் மாயமான நிலையில், அவற்றை சிறுத்தை வேட்டையாடி சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்நிலையின் தொடர்ச்சியாக, மீண்டும் இரவு நேரத்தில் இப்பகுதிக்கு வந்த சிறுத்தை, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதுடன், அங்கிருந்த பாத்திரங்களையும் உருட்டிவிட்டு சென்றுள்ளது.

error: Content is protected !!