News November 18, 2024
மின்னணு முறையில் பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணி

புதுகை மாவட்டத்தில் உள்ள 760 வருவாய்க் கிராமங்களிலும் மின்னணு முறையில் பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதாக கலெக்டர் மு.அருணா தெரிவித்தார். நேற்று திருமயம் வட்டம் மணவாளன்கரை கிராமத்தில் நடைபெறும் கணக்கெடுப்பு பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் வேளாண்மை இணை இயக்குநர் (பொ) ரவிச்சந்திரன், துணை இயக்குநர் (தோட்டக்கலை) கு.அழகுமலை உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News August 25, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேர ரோந்து காவலர்கள் விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 டயல் அப் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
News August 24, 2025
புதுக்கோட்டை: அடிப்படை பிரச்சனைக்கு உடனடி தீர்வு

புதுக்கோட்டை மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் இந்த<
News August 24, 2025
திருமயம் பெருமாள் கோவிலில் பவித்ரோத்ஸவம் விழா நிறைவு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஸ்ரீ உஜ்ஜிவனவல்லி தாயார் சமேத ஸ்ரீ சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் வெள்ளிக்கிழமை தொடங்கிய பவித்ரோத்ஸவம் விழா இன்று காலை10 மணியளவில் நிறைவடைந்தது. இதில் திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.