News July 28, 2024
மின்சார ரயில் ரத்து: பணியில் கூடுதல் போலீசார்

தாம்பரம் யார்டில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில்களில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் அதிக அளவில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News September 20, 2025
“சென்னை ஒன்று” செயலியை தொடங்கி வைக்கும் முதல்வர்

இந்தியாவில் முதல்முறையாக பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில், கேப்/ஆட்டோ ஆகியவற்றை இணைக்கும் “சென்னை ஒன்று” (CHENNAI ONE) செயலியை வரும் செ.22 முதல்வர் முக.ஸ்டாலின் சென்னையில் அறிமுகப்படுத்துகிறார். இச்செயலி மூலம் ஒரே QR சீட்டு மூலம் அனைத்து போக்குவரத்து முறைகளிலும் பயணிக்கலாம்; UPI மற்றும் கார்டு மூலம் கட்டணம் செலுத்தலாம். இந்த செயலி தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கிடைக்கும்.
News September 20, 2025
சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சென்னையில் வரும் (செ.22) நடைபெறும் திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் காரணமாக பல்வேறு சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. காலை 08.00 மணி முதல் வால்டாக்ஸ் சாலை, என்.எஸ்.சி போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும். மாலை 03.00 மணி முதல் யானைக்கவுனி பாலம் மற்றும் வால்டாக்ஸ் சாலை வழியாக வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.
News September 20, 2025
சென்னை தாங்க எல்லாத்துலையும் First

✅சென்னை – ஆசியாவின் முதல் மாநகராட்சி
✅ஸ்பென்சர் பிளாசா – இந்தியாவின் முதல் ஷாப்பிங் மால்
✅ஹிக்கின்பாதம்ஸ் – இந்தியாவின் முதல் புத்தக நிலையம்
✅புனித ஜார்ஜ் கோட்டை – இந்தியாவின் முதல் ஆங்கிலேய கோட்டை
✅மெட்ராஸ் முதலை பூங்கா – இந்தியாவின் முதலாவது
✅ராயபுரம் – தென் இந்தியாவின் முதல் ரயில் நிலையம்
✅சென்னைப் பல்கலைக்கழகம் – தென் இந்தியாவின் தாய் பல்கலைக்கழகம்
சென்னையின் பெருமையை மற்றவருக்கும் பகிருங்கள்